நடிகர் அஜித் எப்பொழுதும் மக்களுக்கு ஏற்றவாறு சில கருத்துக்களை தன் படங்களிலோ அல்லது நேரடியாகவும் தெரிவிப்பார். சமீபத்தில் கூட மக்கள் தங்கள் காதுகளை பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதில் பல அர்த்தங்கள் உள்ளது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இவர் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் பெண்களுக்கான சுதந்திரத்தை பற்றி பேசி இருப்பார். அந்தப்படத்தில் பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதன் மூலமே, அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகிறது என்ற வாதத்தை, இல்லை என்று நிரூபித்து அந்த வழக்கில் வெற்றி பெறுவார் அஜித் குமார்.
Also read: இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த விஜய்.. அஜித் ஆள் அட்ரஸ் காணுமே
அதேபோல் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு பாலியல் ரீதியான வழக்கில் நீதிபதி ஒருவர் வித்தியாசமான தீர்ப்பை தெரிவித்துள்ளார். பாலியல் சீண்டலுக்குள்ளான அந்த பெண்ணின் சாட்சியாக பல புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது, அதில் அந்த பெண்ணின் உடை சரி இல்லை. அதனால் தான் பாலியல் சீண்டல் நடைபெற்றது என்று அந்த வழக்கை திசை திருப்பி முடித்துள்ளார்கள்.
இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது கேரள நாட்டில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. நேர்கொண்ட பார்வை படத்தில், அஜித் விலைமாதுவாக இருந்தால்கூட நோ என்று சொன்னால் நோ தான் என்று ஒரு வார்த்தையை வலியுறுத்தி சொல்லியிருப்பார். ஆனால் இப்படி ஆடை விலகியதுக்கெல்லாம் பெண்களை குற்றம் சொல்லி அசிங்கப்படுத்தி இருப்பது அவர்களுக்கு முழு சுதந்தரம் இல்லை என்பதை குறிக்கிறது.
Also read : இரவு பார்ட்டியில் அஜித் மகள், ஷாலினி.. புகைப்படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்
அஜித் திரைப்படத்தில் கூறிய சம்பவத்தை பார்த்த பெண்கள் இப்போது உண்மையாகவே அந்த மாதிரி ஒரு சம்பவம் நடைபெற்று அதற்கான நீதி கிடைக்காமல் நீதிபதியே தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார் என்று அந்த நீதிபதியை வசை பாடி வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வையில் படத்தை பார்த்து வாதாடி இருந்தாலாவது இந்த இடத்தில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கும் என கேரளா நாட்டில் அனைவரும் சட்ட வல்லுனர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.
Also read : போற இடமெல்லாம் சக்சஸ் தான்.. திருச்சி துப்பாக்கிச்சூடும் போட்டியில் அஜித்க்கு இத்தனை பதக்கங்களா.?