அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் லுக் சமீபத்தில் வெளிவந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பழைய அமர்க்களம் படத்தில் உள்ள அஜித் மாதிரி மாறிவிட்டார். ஹாலிவுட் பட ஹீரோ போல் காட்சியளித்ததில் அவரது ரசிகர்கள் ஹேப்பி மூடில் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 94 கிலோவில் இருந்த அஜித் இப்பொழுது 78 கிலோ ஆளாக மாறியுள்ளார். இதற்கு முழு காரணம் அவரது கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்கள் தான். நான்கு மாதங்களாக அசைவம் , ஜங் ஃபுட் எதுவும் சாப்பிடவில்லை மாறாக பச்சை காய்கறிகளையும் பழசாறுகளையும் குடித்து வந்தாராம்.
ஆறு மாதத்தில் 16 கிலோ எடையை குறைத்துள்ளார்.ஏகே எப்பொழுதும் அஜித் வித்தியாசமான சிந்தனை உடையவர். படத்திற்காக இதை அவர் செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஒரிஜினாலிட்டி மாறிவிடக்கூடாது என்பதில் எப்பொழுதுமே அஜித் கவனமாக இருப்பார்.
படத்தில் கூட நரைமுடி தோற்றத்துடனே நடித்து வந்தார். இப்பொழுது அவர் எடையை குறைத்ததற்கு முக்கிய காரணம் கார் ரேஸ். ஜனவரி முதல் வாரத்தில் அஜித் துபாய் கிளம்புகிறார். அங்கே ஒரு வாரம் தீவிர கார் பந்தயத்திற்கான பயிற்சி எடுக்க உள்ளார். அதற்குள் விடாமுயற்சி’ குட்பேட்டை படத்திற்கான சூட்டிங்கை முடிக்கிறார்.
கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக இத்தனை வயது உடைய மனிதர் இவ்வளவு கிலோ வெயிட் தான் இருக்க வேண்டும். அந்த வயது வரம்பிற்கு ஏற்ற இடை என ஒரு ஸ்லாப் இருக்கிறது. அதற்குண்டான உயரம் எடை இருந்தால் மட்டுமே கார் பந்தயத்தில் கலந்து கொள்ள முடியும். 11-12 தேதியில் துபாயில் கார் ரேஸ் நடக்க உள்ளது. கார் பந்தயத்தில் உள்ள வெறி தான் அவர் எடையை குறைப்பதற்கான முக்கிய காரணம்.