திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குட் பேட் அக்லி நடிக்கும் 5 முக்கிய பிரபலங்களின் சம்பள விவரம்.. நியூமராலஜி படி ஒற்றை காலில் நிற்கும் அஜித்

அஜித், ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்திற்கு 27 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்புக்கு கால் சீட் கொடுத்திருக்கிறார். இரண்டாம் கட்ட படபிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருக்கிறது. அக்டோபரில் முழு படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறுகிறது. இந்த படம் 2025 பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்கும் பிரபலங்கள்,

அர்ஜுன்
அருண் விஜய்
ரெஜினா கசான்ரா
திரிஷா
நயன்தாரா
ஆரவ்

இப்பொழுது இந்த படத்தில் நடிக்கும் ஆர்டிஸ்ட்டுகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

புதுவரவாக நயன்தாரா இந்த படத்தில் இணைகிறார். படத்தில் அஜித் மூன்று விதமான கேரக்டரில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்திற்குப் பிறகு 5 வருடங்கள் கழித்து அஜித் உடன் இணைகிறார் நயன்தாரா. அஜித்துக்கு 3 கெட்டப் என்பதால் இன்னும் புதுப்புது ஹீரோயின்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா உடன் அஜித் நடித்த 5 படங்கள்,

Billa (2007)
Aegan (2008)
Arrambam (2013)

நியூமராலஜி படி ஒற்றை காலில் நிற்கும் அஜித்

இந்த படத்தில் அஜித்துக்கு சம்பளமாக 163 கோடிகள் தயாரிப்பாளர் மைதிலி மூவி மேக்கர்ஸ் கொடுக்கின்றனர். அஜித் நியூமராலஜி படி கரெக்டா புள்ளி விவரமாகஇவ்வளவு சம்பளம் தான் வேண்டுமென கேட்டு வாங்கி கொள்கிறாராம். ஹீரோயின் நயன்தாரா, திரிஷாவிற்கு இந்த படத்தில் 10 கோடிகள்.

இவர்களை தவிர அர்ஜுனுக்கு 12 கோடிகளும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 15 கோடிகளும், ரெஜினா கசான்ரா மற்றும் நடிகர் ஆரவ் என இருவருக்கும் 40 லட்சங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த படம் மொத்தம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

விடாமுயற்சியை ஒதுக்கி வைத்து வேகம் எடுத்த குட் பேட் அக்லி

Trending News