தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எப்போதுமே தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர். தேவையில்லாத எந்த ஒரு சண்டை சச்சரவும் இவரது பெயரில் இல்லை.
குறிப்பாக சமூக வலைத்தளத்தில் தல அஜித் இல்லவே இல்லை. அதுவே அவருக்கு ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது. இருந்தாலும் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் சண்டை அவருக்கு வருத்தத்தை கொடுக்கிறதாம்.
அடுத்ததாக தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தல அஜித் தன்னுடைய அறையில் பாதி குடித்துவிட்டு இருக்கும் சரக்கு கிளாஸ் இருப்பதை பார்க்காமல் போஸ் கொடுத்துள்ளார். அதில் அந்த சரக்கு கிளாஸ் மட்டும் ரசிகர்களுக்கு துண்டாக தெரிந்துள்ளது.
இதனை பார்த்த அஜித்தின் நல விரும்பிகள் உடனடியாக சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அஜித் என்ற பெயரைக் கேட்டாலே சமூக வளைதளம் மிரண்டு விடும். இதில் சரக்கு கிளாஸ் உடன் அஜித் என்றால் வைரல் ஆகாமல் இருக்குமா.
இணைய தளமே அதிர்ந்து போகும் அளவுக்கு காட்டுத்தனமாக வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது தல அஜித் என்னை அறிந்தால் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது. எப்பவோ எடுத்ததை இப்போது கிளப்பி விட்டுள்ளனர் சிலர்.