வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாட்டையை சுழற்றிய அஜித்தால் அரண்டு போன லைகா.. ஜூன் இல் பேக்கப் பண்ணும் மூடில் ஏகே

Ajith ordered to complete the Vidaamuyarchi movie by June: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அவர்களுக்கு கடந்த ஆண்டு வெளியான துணிவின் வெற்றியால் சிறப்புடனே ஆரம்பித்தது.  

இதன் பின் அடுத்த படத்திற்கான தீவிர இயக்குனர் தேடலில் கிடைத்தவர் தான் விக்னேஷ் சிவன். பல்வேறு குளறுபடிகளால் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக  லைகாவின் தயாரிப்பில் மகிழ் திருமேனியுடன் விடாமுயற்சியில் ஒப்பந்தமானார் ஏ கே.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், பல்வேறு தடை மற்றும் தாமதங்களால் ஒரு வருட காலமாக விடாமுயற்சிக்கு பலன் இல்லாமல் இழுத்துக் கொண்டு போகிறது.

இயக்குனர் அவர் பங்குக்கு ஒளிப்பதிவாளர் மாற்றம், எடுத்த காட்சிகளை திரும்பத் திரும்ப எடுப்பது என படபிடிப்பை நீட்டித்துக் கொண்டே சென்று வருகிறார்.

இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான தயாரிப்பு நிறுவனமோ, படத்தை முழுமை செய்ய முடியாமல் பாதியிலேயே நிறுத்தி வைத்தது.

இதற்கிடையில் உடல்  நலத்தில் ஏற்பட்ட தொய்வால் விடாமுயற்சிக்கு விடுமுறை கொடுத்து ஓய்வெடுக்க சென்றார் அஜித். தீவிரகொள்கை பிடிப்பாளரான அஜித் தான் நடிக்கும் ஒரு படம் முடியாமல் அடுத்த படத்திற்கான அறிவிப்பை கொடுக்க மாட்டார்.

ஆனால் இந்த முறை லைகாவிடம் ஏற்பட்ட சுணக்கத்தினால் அடுத்த படமான ஏகே 63 படத்திற்கு ஒப்பந்தமாகி தலைப்பு, ரிலீஸ் தேதி, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என பலவற்றையும் சுடச்சுட அப்டேட் கொடுத்தார்.

2025 பொங்கலுக்கு ரிலீசாக உள்ள அஜித்தின் குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணையும் அஜித்தின் அடுத்த படம் குட் பேட் அக்லி வருகின்ற 2025 பொங்கலுக்கு ரிலீசாகும் என்கின்ற தகவல் வெளியானது.

 ஜூனில் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது எனவும் முழுக்க முழுக்க ஜப்பானிலேயே நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் படக் குழுவினர்.

இதனை கருத்தில் கொண்டு லைகாவிடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் விடாமுயற்சி படத்தை முடிக்க வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார்.

விடாமுயற்சி திரைப்படம் முடிக்க முடியாத பட்சத்தில் ஜூன் மாதம் அடுத்த படத்திற்கான கால் சீட்டை ஒதுக்கி குட் பேட் அக்லியில் இணைய உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனால் லைகா என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி உள்ளனர். டிஜிட்டல் உரிமையை ஏற்கனவே விற்று விட்டதால் படத்தை பாதியில் கைவிடுவது என்பது முடியாத காரியமாக உள்ளது.

இதனால் விடாமுயற்சி படத்தின் உரிமையை அஜித்தின்  வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்த போனி கபூரிடம் விற்று விடலாமா என்றும் யோசித்து ஆலோசித்து வருகின்றனர்.

Trending News