Ajith Kumar: விஜய்- அஜித் பஞ்சாயத்து என்பது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. திரைக்குப் பின்னால் இவர்கள் இருவரும் நல்லவிதமாக நட்பு பாராட்டி வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் சினிமா வியாபாரத்திற்காக இருவருக்குள்ளே இருக்கும் போட்டி பொதுவெளியில் கொழுந்து விட்டு எறிவது போல் காட்டப்படும்.
இது எல்லாத்திற்கும் முடிவு தான் விஜயின் அரசியல் என்ட்ரி என்று சொல்லப்பட்டது.
பகடை காயான அஜித்
ஆனால் இப்போது அரசியல் ஆதாயத்திற்காக இந்த இரண்டு காளைகளை மோதவிட அரசியல் புள்ளிகள் முடிவெடுத்து விட்டார்கள் போல.
அஜித்துக்கு நேற்று பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. இதை தமிழக மக்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
அதே நேரத்தில் அஜித்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்தது அரசியல் உள்நோக்கத்துடன் என ஒரு சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அஜித் சினிமாவை தாண்டி சமூகப் பிரச்சனைகள் என்று வரும் பொழுது பெரிதாக எதுவும் செய்ததில்லை. அவர் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதும் கிடையாது.
அப்படி இருக்கும்போது எதற்காக அவருக்கு பத்மபூஷன் விருது கொடுக்க வேண்டும்.
விஜய் மத்திய அரசை எதிர்ப்பதால் அவருக்கு போட்டியாளரான அஜித்துக்கு விருது கொடுத்து கௌரவிக்கிறது மத்திய அரசு என பேசப்படுகிறது.
இந்த நிலைமை அஜித்துக்கு மட்டும் வந்தது கிடையாது. 25 வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்திற்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது.
அப்போதும் சினிமாவில் அவருடைய பங்களிப்பை பற்றி பேசாமல் அரசியல் உள்நோக்கத்துடன் விருது கொடுத்ததாக பேசப்பட்டது.