செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இரண்டு கதாநாயகிகளுடன் ஜோடி போடும் அஜித்.. விக்னேஷ் சிவன் வைக்க போகும் டபுள் ட்ரீட்.!

இப்பொழுது வெளிவந்த அஜித்தின் துணிவு திரைப்படம் வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இவருக்கு அடுத்த படமான ஏகே62 சில அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு இப்பொழுது செம்மையாக ட்ரெண்ட் ஆகி வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க போவதாக அபிஷியல் அறிவிப்பு வந்துள்ளது.

இந்த படத்தில் வெறித்தனமான இரண்டு வில்லன்கள் இருக்க போவதாக தெரிய வந்துள்ளது. இரண்டு வில்லன்களும் இவர்களின் முந்தைய படத்தில் வில்லனாக நடித்து மிகப் பிரம்மாண்டமாக பெரிய அளவில் பெயர் வாங்கியவர்கள். இந்த வில்லன் கதாபாத்திரத்தில் அஜித் மற்றும் அரவிந்த்சாமி நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. இவர்கள் இருவரும் 25 வருஷத்துக்கு முன்னதாகவே இணைந்து நடித்துள்ள படம் பாசமலர்.

Also read: மீண்டும் இணையும் மெகா கூட்டணி.. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகும் அஜித்

இதுக்கு அப்புறம் இவர்கள் கூட்டணி இப்பொழுது இணைகிறது. மேலும் சந்தானம் சமீப காலமாகவே ஹீரோவாக நடித்ததிலிருந்து காமெடியனாக நடிக்க போவதில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் இந்த படத்திற்கு சந்தானம் ஓகே சொல்லிட்டாராம், அதிலிருந்து இவருடைய கதாபாத்திரம் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக தான் இருக்கும் என்று பேசப்படுகிறது.

மேலும் விக்னேஷ் சிவன் படத்தில் பொதுவாக அனிருத் தான் இசையமைத்திருப்பார். அதே மாதிரி இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போவதாக வெளியாகி உள்ளது. இன்னும் இந்தப் படத்திற்கு இரண்டு ஜோடிகள் இருப்பதாகவும் அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாகவும் பேசப்படுகிறது.

Also read: துணிவு படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகர்.. அஜித் செய்யாததை செய்து காட்டிய வாரிசு நடிகர்

பல ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு ஜோடி உடன் கதையில் அஜித் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவனின் முந்தைய படங்கள் அனைத்தும் காதல் கதையை மையமாகக் வைத்து எடுத்த படம். அந்த வகையில் விக்னேஷ் சிவன் ஒரு அஜித் மாதிரியான மாஸ் ஹீரோவை வைத்து எடுக்க கூடிய படம் எப்படி இருக்கும் என்று பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது காதல் கலந்த ஆக்ஷன் படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித் மங்காத்தாவில் வில்லன் கதாபாத்திரத்திலும் மற்றும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி நெகட்டி கேரக்டரையும் நடித்திருப்பார்கள். அதே அளவுக்கு இந்தப் படத்திலும் இவர்களின் வில்லத்தனத்தை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கான படபிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது.

Also read: அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தெம்பில்லாத துணிவு.. தலை கால் புரியாமல் ஆடும் வாரிசுவின் ஆட்டநாயகன்

Trending News