திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆஸ்கருக்கு தயாராகும் அஜித்.. யாரும் எதிர்பார்க்காத புது அவதாரம் எடுக்கும் ஏ கே

Actor Ajith: பிரம்மாண்டத்தின் படைப்பாய், அஜித் நடிப்பில் உருவாகி மாஸ் வெற்றியை கொடுத்த படம் தான் துணிவு. இதைத் தொடர்ந்து இவரை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஏராளம். இருப்பினும் இவரின் நாட்டம் வேறு திசையில் செல்வது குறித்து ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அஜித்தின் பல வெற்றி படங்களை தொடர்ந்து தற்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம் தான் விடாமுயற்சி. இவர் நடிப்பை மட்டும் மேற்கொள்ளாமல் பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டு உலகம் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Also Read: ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் முதல் 8 நடிகைகள்.. 40 வயதில் அம்மா நயனை பின்னுக்கு தள்ளிய திரிஷா

இவரின் முயற்சியை படமாக்கும் நோக்கத்தில் ஒளிப்பதிவு செய்து வருகிறார் நீரவ் ஷா. அஜித் மேற்கொள்ளும் பயணங்கள் மற்றும் இவரின் டூர் சம்பந்தமான விவரங்கள் போன்ற அனைத்திலும் ஆர்வம் காட்டி வரும் இவர் அஜித்தின் பயணம் என்ற ஒரு டாக்குமெண்டரியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது அஜித் லண்டன் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே ஏ கே இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஒன்று வைத்திருக்கிறார் அஜித். அவ்வாறு இருக்க அஜித் பியூச்சர் ஃபிலிம்ஸ் எடுப்பது அவரது கனவு இல்லை. மேலும்  மற்றவர்கள் செய்தாலும் முடிந்த வரை இவர் வேண்டாம் என்று தான் கூறுவார்.

Also Read: நிச்சயதார்த்தத்தை பற்றி கவலைப்படும் கோபி.. பேசியே உஷார் பண்ணின பழனிச்சாமி

அவ்வாறு இருக்க தான் மேற்கொள்ளும் பைக் ரைடிங்கை இந்தியாவிலும் மற்றும் உலக அளவில் உற்று நோக்கும் படி, பேசும் படி விஷயங்களை டாக்குமெண்டரி படமாக எடுக்க உள்ளார். மேலும் அதை எடுத்து உலக நாடுகளில் நடத்தப்படும் பெஸ்டிவல் நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இது ஒரு பக்கம் மகிழ்ச்சியான செய்தியாக இருப்பினும் மறுபக்கம் எங்கு நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு விடுவாரோ என்ற கவலை ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. தற்பொழுது நடிப்பை விட இதுபோன்ற செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் ஏ கே.

Also Read: தளபதி வீட்டுக்கு அருகே வீடு வாங்கிய 3 பிரபலங்கள்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

Trending News