Ajith : அஜித் தற்போது குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதால் படக்குழு இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.
சினிமாவில் அஜித்துக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதைவிட சற்று கூடுதலாகவே பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் தனது குழு உடன் கலந்து கொண்டார்.
அதோடு மட்டும் அல்லாமல் மூன்றாவது பரிசும் அவருக்கு கிடைத்தது. மேலும் வெவ்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயத்திலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
மகனை களத்தில் இறக்கும் அஜித்

இந்த சூழலில் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போல தனது மகனுக்கும் கார் ரேஸ் கற்றுக் கொடுக்கிறார் அஜித். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டு இருக்கிறது.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா

அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்தாட்டத்தில் கைதேர்ந்தவர். மேலும் கிரிக்கெட் பார்ப்பதற்காக தனது அம்மாவுடன் ஆதிவிக் அடிக்கடி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவது உண்டு.
இவ்வாறு சிறு வயதிலேயே விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் உடையவராக ஆத்விக் இருக்கிறார். இப்போது தந்தை வழியில் கார் ரேஸும் மேற்கொண்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்பாவையே மிஞ்சிடுவார் போல என்று கூறி வருகின்றனர்.