விடாமுயற்சி, குட்பேட் அக்லீ என அடுத்தடுத்து அஜித்துக்கு இரண்டு படங்கள் வருவதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிப்ரவரி 6 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு படங்களும் வெளிவருகிறது.
இப்பொழுது அஜித் துபாயில் இருக்கிறார். கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்த அவர் தற்போது அங்கே தான் ஓய்வெடுத்து வருகிறார். மீண்டும் அக்டோபர் மாதத்தில் தான் இந்தியா வருகிறார்.
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திற்கான தனது போர்ஷன்களை முழுமையாக முடித்து விட்டார். துபாயில் இருக்கும்போது தன்னை பட வேலைகளுக்காக அழைக்கக் கூடாது என்பதற்காக முற்றிலும் முடித்து கையில் கொடுத்து விட்டார். ஆறு மாதத்திற்கு பின்பு தான் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
பொங்கலுக்கு நேசிப்பாயா என்ற ஒரு படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன். இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வாங்கி விநியோகம் செய்தது. இதனால் உதயநிதி மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தன் இருவருக்கும் நிறைய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சு வார்த்தையில் அஜித்தின் கால் சீட் விஷ்ணுவர்தனிடம் இருப்பது உதயநிதிக்கு தெரியவந்துள்ளது. அதனால் அவரை வைத்து ஒரு படம் பண்ண முயற்சி செய்யலாம் என திட்டமிட்டுள்ளார் உதயநிதி. விஷ்ணுவர்தனும் இதற்கு சம்மதித்து உள்ளார்.
குட்பேட் அக்லீ படத்திற்கு அஜித் 163 கோடிகள் சம்பளமாக வாங்கியுள்ளார். இப்பொழுது 200 கோடிகள் வர கொடுக்க ரெட் ஜெயன்ட் தரப்பு ரெடியாக இருக்கிறது. மீண்டும் அவர்கள் படம் தயாரிக்க திட்டமிட்டு வருகிறார்கள். அஜித் ஃபார்முலாபடி சம்பளம் கொடுப்பதற்கும் சம்மதித்துள்ளனர்.