வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கங்குவாவை பார்த்து அஜித் எடுத்த முடிவு.. சிவாவுடன் மீண்டும் கூட்டணியா? ஓட்டமா?

சினிமாவில் ஒளிப்பதிவாளராக வாழ்க்கையை ஆரம்பித்த சிவா அதன்பின், செளர்யம் என்ற படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பிஸியானார். அதன்பின், சங்கம், தருவு ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.

முன்ணி இயக்குனராக உயர்ந்த சிவா, கார்த்தி இயக்கத்தில் சிறுத்தை படத்தை இயக்கினார். அதன்பின், அஜித்துடன் கூட்டணி அமைத்து, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.

நீண்ட இடைவேளைக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அண்ணாத்த பட த்தை இயக்கிய நிலையில் அது கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, சூர்யாவுடன் கூட்டணி அமைத்து கங்குவா படத்தை இயக்கினார். இப்படம் நேற்று ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பொதுவாகவே அஜித் தனக்குப் பிடித்த இயக்குனர் என்றால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பவர். அதனால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் சிவா கூட்டணியில் படங்களில் நடித்து வந்தார். அப்படங்களும் பேசப்பட்டன.

அஜித்துடன் 5வது முறையாக கூட்டணி அமைக்கும் சிவா

இந்த நிலையில் கங்குவா படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவா, அஜித்துடன் மீண்டும் இணையப் போவதாகத் தகவல் வெளியாகிறது. விஸ்வாசம் படம் அப்போதே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த நிலையில், இவர்கள் ஐந்தாவது முறையாக கூட்டணி சேரும் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு குவிந்துவிட்டது.

சூர்யா, சிவா கூட்டணியில் தற்போது ரிலீஸாகியுள்ள படம் வசூலில் கல்லா கட்டி வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துவிடும். எனவே இப்படத்தின் மேக்கிங், இதன் வசூல், இதெல்லாம் வைத்துத்தான் அஜித் படத்தில் சிவாவின் சம்பளமும் நிர்ணயமாகும்.

அதேபோல் அஜித் தற்போது, விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு குட் பேட் அக்லி-யில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டு, அடுத்து சிவாவுடன் கூட்டணி அமைத்தால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சிவாவை அஜித் விட மாட்டார் என்பதால், எப்படியும் தொடர்ச்சியாக 4 படங்களுக்காவது இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும், எல்லாம் கடவுளின் கையில்தான் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுத்தை பட வெற்றிக்குப் பின் அப்படத்தைப் பார்த்து, வீரம் பட வாய்ப்பு கொடுத்த அஜித், கங்குவா படத்தைப் பார்த்திருப்பார் என கூறப்படுகிறது. அதனால் தான் சிவாவின் படத்தை அஜித் உறுதி செய்திருப்பார். இப்படம் வேற லெவலில் உருவாக்க இருவரும் திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகிறது.

Trending News