சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

துபாயில் சீக்ரெட்டாக வேலையை பார்த்த அஜித்.. சேட்டுகளுக்கு தெரியாமல் முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்த ஏகே

Actor Ajith: அஜித் சமீப காலமாக துபாயில் வட்டமிட்டு வருகிறார். என்னப்பா இது அஜித் எப்பொழுதுமே துபாய் வரவே மாட்டார் கடந்த சில நாட்களாக துபாயிலேயே மையம் கொண்டு இருக்கிறார் என விசாரித்துப் பார்த்தால் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

அஜித் நடிப்பதை காட்டிலும் கார் பைக் ரேசிங், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் தயாரிப்பு, போட்டோகிராபி, குக்கிங் போன்றவற்றிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அதிலும் அஜித்தின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வரும் தக்ஷா குழு இந்திய ராணுவத்திற்கு 200 ட்ரோன்களை ரூபாய் 165 கோடிக்கு தயாரிக்கும் ஆர்டரை பெற்றுள்ளன.

Also Read: விஜய்யை பகைத்துக் கொண்ட லைக்கா.. 9 வருட பகையை முடிவுக்கு கொண்டு வந்த சுபாஸ்கரன்

இதற்காக அஜித் ட்ரோன் சம்பந்தமான பொருட்களை வாங்க தான் துபாய் சென்றுள்ளார். அது மட்டுமல்ல மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் விடாமுயற்சி படம் அங்கேதான் சூட்டிங் நடக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் அஜித் அங்குள்ள சேட்டுகளுக்கெல்லாம் தெரியாமல் துபாயில் ஒரு வீடே வாங்கி விட்டாராம். கெஸ்ட் ஹவுஸ் மாதிரி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அங்கே தான் இப்பொழுது தங்கி இருக்கிறார். இந்த விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைத்து விட்டார்.

Also Read: அஜித் மச்சானுக்கு செய்த பெரிய துரோகம்.. தவம் கிடக்கும் ரிச்சர்ட்டை ஏமாற்றி 3வது நபரை வளர்த்து விட்ட ஏகே

பெரும்பாலும் அஜித் துபாய் சென்றால் அங்குள்ள சேட்டுகளின் கெஸ்ட் ஹவுஸில் ரெண்டுக்கு தங்குவார். ஆனால் இப்போது அவருக்கென்று ஒரு தனி வீடு துபாயில் இருக்கிறது. இதனால் அங்கேயேஷூட்டிங் நடத்தி முடித்து விடலாம் என அக்டோபர் முதல் ஜனவரி வரை விடாமுயற்சி படத்திற்கு டேட் கொடுத்து இருக்கிறார்.

இனிமேல் வாடகைக்கு வீடு எடுக்காமல் அவருடைய இடத்தில் தான் தங்கவிருக்கிறார் அஜித். அது மட்டுமல்ல விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையும் துவங்க இருப்பதால் தற்போது தல ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர்.

Also Read: விடாமுயற்சி எல்லாம் எனக்கு செகண்ட் ஆப்ஷன் தான்.. பாதி இலங்கையை வாங்கிய சுபாஸ்கரன்

Trending News