புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புது அவதாரத்துக்கு தயாராகும் அஜித்.. அவார்ட் இயக்குனருடன் ரகசியமாக நடந்த மீட்டிங்

Ajith: அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தற்போது வேகம் எடுத்துள்ள இப்படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் திட்டம். ஏனென்றால் இப்படத்திற்கு பிறகு அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதில் அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக நீண்ட நாட்களாகவே ஒரு தகவல் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட உறுதியான இந்த படத்திற்கு அடுத்ததாக சிறுத்தை சிவா உடன் அஜித் இணைய இருக்கிறார்.

Also read: விஜய், அஜித்தால் குஷியில் ஓடிடி.. தியேட்டர்களை காப்பாற்ற ஓவர் டைம் பார்க்கும் ரஜினி, கமல்

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வீரம், விசுவாசம் ஆகிய படங்கள் வெளிவந்து சக்கை போடு போட்டது. அதையடுத்து தற்போது சூர்யாவை இயக்கி வரும் சிறுத்தை சிவா அஜித்துக்காக தரமான கதை ஒன்றை தயார் செய்து சம்மதமும் வாங்கி விட்டாராம்.

இந்த படத்திற்கு அடுத்ததாக யாருடன் நடிக்க வேண்டும் என்பதையும் அஜித் தற்போது முடிவு செய்து இருக்கிறார். அதன்படி வெற்றிமாறன் தான் அஜித்தின் 65 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே விஜய்யின் கடைசி படத்தை இவர்தான் இயக்குவார் என்ற ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அது எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அஜித்துடன் தான் வெற்றிமாறன் இணைவார் என்ற பேச்சை இப்போது எழுந்துள்ளது. இது மட்டும் நடந்தால் நிச்சயம் வெற்றிமாறன் அஜித்தை புது அவதாரம் எடுக்க வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: அஜித்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த வாரிசு நடிகர்.. 30 வருடமாக புலம்பித் தவிக்கும் அன்பு செல்வன்

Trending News