செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித்தின் சென்டிமென்ட்டுக்கு ஆப்பு வைத்த வாரிசு.. துணிவுக்கு ஷாக் கொடுத்த விஜய்

பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் ரிலீஸ் பற்றிய பேச்சு தான் இப்போது மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. சமீபத்தில் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு ஒரு நாள் முன்பாக ஜனவரி 11 அன்று துணிவு வெளியாக இருக்கிறது. இதுதான் இப்போது மீடியாவின் முக்கிய செய்தியாக இருக்கிறது. மேலும் இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளிவரும் என்று திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

Also read: வாரிசு சக்சஸ் ரேட்டை இப்பவே உறுதி செய்த சென்சார் போர்டு.. கதிகலங்கிய வம்சி

அதன் மூலம் மீடியாக்களுக்கும் சுட சுட செய்திகள் கிடைக்கும் என்ற ரீதியிலும் பேசப்பட்டது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாக இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. என்னவென்றால் அஜித் தன்னுடைய படத்தை எப்போதும் வியாழக்கிழமை தான் வெளியிடுவார்.

அது அவருடைய பல வருட சென்டிமென்ட் ஆக இருக்கிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களும் அதே வியாழக்கிழமை தான் வெளியானது. அதேபோன்று துணிவு திரைப்படத்தையும் வியாழக்கிழமை வெளியிடுவதற்கு தான் பட குழு முடிவு செய்திருந்தது. இருந்தாலும் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த பிறகு தங்களுடைய ரிலீஸ் செய்தியை அறிவிக்கலாம் என்று பொறுமையாக காத்திருந்தது.

Also read: ஒரு கை பார்க்க துணிந்த அஜித்.. பரம ரகசியமாக நடக்கும் பிரமோஷன்

ஏனென்றால் இரு படங்களும் ஒரே நாளில் வெளியானால் எந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் அதிகம் என்ற தேவையில்லாத சர்ச்சை உருவாகும். அதனாலேயே வாரிசு ரிலீஸ் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று பட குழு முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்க்கு தற்போது வாரிசு மிகப்பெரிய ஆப்பு வைத்திருக்கிறது. எப்படி என்றால் வாராவாரம் வெளியாகும் புது படங்கள் வெள்ளிக்கிழமை தினத்தில் தான் வெளியாகும்.

அந்த வகையில் வாரிசு 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியானால் துணிவை வியாழக்கிழமை வெளியிடலாம் என அஜித் போட்டு வைத்திருந்த அத்தனை பிளானும் இப்போது தவிடு பொடியாக்கியுள்ளது. இருப்பினும் மனம் தளராத படக்குழு இப்போது புதன்கிழமை படத்தை வெளியிடுகிறது. அந்த வகையில் அஜித்தின் சென்டிமென்ட் இதில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது இருக்கிறது.

Also read: நீயா நானா போட்டியில் துணிவுக்கு விட்டுக் கொடுத்த வாரிசு விஜய்.. உறுதியான ரிலீஸ் தேதி

Trending News