புதன்கிழமை, ஜனவரி 15, 2025

3 முறை தள்ளிப்போன அஜித்தின் திருமணம்.. பிரபல நடிகரால் ஏற்பட்ட பிரச்சனையை கூறிய பிரபலம்

சினிமா பிரபலங்கள் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது சகஜம்தான். அவர்களது திருமண வாழ்க்கை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே நீடிக்கிறது. ஆனால் இவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இன்றுவரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் ஷாலினி.

இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலித்துள்ளனர். இரு குடும்பத்துடன் சம்மதத்துடன் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்துள்ளது. மேலும் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவளது எளிதில் இவர்களது திருமணம் நடக்க வில்லையாம்.

கமல் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான நிறம் படத்தில் ஷாலினி நடித்திருந்தார். இப்படத்தை தமிழிலும் கமல் இயக்கியுள்ளார். அதாவது பிரசாந்த், ஷாலினி, கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் வெளியான பிரியாத வரம் வேண்டும் என்ற படம்தான் அது.

அப்போது பிரியாத வரம் வேண்டும் படத்தின் சூட்டிங் மூன்று நாள் மட்டுமே மீதம் இருந்ததால் அஜித், ஷாலினி திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அப்போது பிரசாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போயுள்ளது. அதன் பிறகும் ஒரு சில காரணங்களால் அந்த காட்சிகள் எடுக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

அதன்பிறகு ஷாலினி தயாரிப்பில் சங்கத்திடம் படத்தை சீக்கிரம் முடிக்கும்படி கூறியுள்ளார். அதன்பிறகு ஷாலினி அந்த காட்சிகளில் நடித்து முடித்தார். ஜனவரி மாதம் நடக்க இருந்த அஜித், ஷாலினி திருமணம் பிரியாத வரம் வேண்டும் படத்தினால் ஏப்ரல் மாதம் தான் நடந்தது.

இந்த விஷயத்தை இயக்குனர் பேரரசு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு ஷாலினி குடும்பம், குழந்தைகளை வளர்ப்பது என சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார். மேலும் அஜித்தின் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் ஷாலினி இருந்துள்ளார்.

Trending News