வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வருமானம் வராது என அஜித்துக்கு ஷாலினியை கொடுக்க மறுத்த மாமனார்.. கெத்து காட்டி தூக்கி வந்த தல!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித்(ajith) பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவரை திருமணம் செய்ய அஜித் என்ன எல்லாம் பாடுபட்டார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

ஷாலினியின் சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கும் போது அவரிடம் தன் காதலைச் சொல்லி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்தவர்தான் தல அஜித். ஷாலினி மட்டுமில்லாமல் அவரது தங்கை ஷாமிலியும் சினிமாவில் பரபரப்பாக நடித்து வந்த காலகட்டம் அது.

அப்போது இருவரது கால் சீட்டுகளையும் ஷாலினியின் தந்தை தான் பார்த்துக் கொண்டாராம். நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு பல மொழிகளில் பல படங்களில் இருவரும் நடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தல அஜித் ஷாலினியிடம் தன்னுடைய காதலை தெரிவிக்க அவரும் ஓகே சொல்ல உடனடியாக ஷாலினியின் தந்தையிடம் பொண்ணு கேட்டு சென்றுள்ளார் தல அஜித். ஆனால் அவரது மாமனார் உடனடியாக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.

அதற்கு காரணம் ஷாலினியை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தனக்கு வருமானம் வராது என்று கூறி நிராகரித்து விட்டாராம். ஆனால் தல அஜித் உடனடியாக ஒரு பெரிய தொகையை அவரது மாமனாருக்கு கொடுத்துவிட்டு உடனடியாக ஷாலினியை திருமணம் செய்து கொண்டாராம்.

ஷாலினி விஷயத்தில் யாரேனும் ஏதேனும் சொல்லி விட்டால் தல அஜித்துக்கு அப்படி ஒரு கோபம் வந்து விடுமாம். அந்தளவு ஷாலினியை காதலித்து வருவதாக அப்போதே பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியானது. இன்றுவரை அனைவரும் தல அஜித் ஷாலினி ஜோடி போல் வேண்டும் என கூறுவதை கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ajith-shalini-cinemapettai
ajith-shalini-cinemapettai

Trending News