வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மெகா பட்ஜெட்டில் உருவாகும் அஜித் – சிறுத்தை சிவா கூட்டணி.. இனிதான் இருக்கு ஆட்டம்

அஜித்குமார் தற்போது விடாமுயற்சி பட த்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லி. இப்படம் வெளிநாட்டில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்படமும் அடுத்த மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டிற்குள் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் அனைத்தையும் முடித்துவிட்டு, அஜித் புதிய படத்தில் இணையவுள்ளார். ஆம்! எல்லோரும் எதிர்பார்த்த அந்தப் படம் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் உருவாகும் 5 வது படமாகும்.

ஏற்கனவே இருவரின் கூட்டணியின் வீரம் படம் சூப்பர் ஹிட், வேதாளம் படம் சூப்பர் ஹிட், விவேகம் படம் ஹிட், விஸ்வாசம் சூப்பர் ஹிட் என்பதால், அடுத்த படமும் நிச்சயம் ஹிட் லிஸ்டில் பல கோடி வசூல் குவிக்கும் என ரசிகர்கள் இப்போதே கணக்குப் போடத் தொடங்கிவிட்டனர்.

பிரமாண்ட பட்ஜெட்டில் அஜித்- சிவா கூட்டணில் அடுத்த படம்!

அஜித், சிவா கூட்டணி என்றாலே ஆக்சனுக்கு பஞ்சமிருக்காது. அதனால் இப்படத்தை பற்றித்தான் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதிலும் கங்குவா படத்தின் வெற்றிக்குப் பின் சிவாவின் மீதான நம்பிக்கை பெரிய பட்ஜெட் படங்களை சிவா இயக்குவார் என்ற நம்பிக்கையும் அஜித்துக்கு கூடியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, அஜித்தின் இப்புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாகவும், அஜித்தின் கேரியரின் இதுவரை இல்லாத அளவு அதிக பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, இப்பட ஷூட்டிங்கை தொடங்க இருப்பதாகவும், இப்படம் தகவல் வெளியாகிறது.

இப்படம் தொடங்க தாமதம் ஏன்?

ஒருவேளை குட் பேட் அக்லி படத்திற்காக ஸ்பெயின் சென்றுள்ள அஜித், ஷூட்டிங் முடித்துவிட்டு வந்தால், அவர் இப்புதிய படத்தின் தொடக்க பூஜையில் மட்டும், பங்கேற்பார் எனவும், அதன்பின் 2 மாத ஓய்வுக்குப் பிறகு சிவாஷூட்டிங்கில் அவர் பங்கேற்பார் எனவும், 2025ல் பிப்ரவரியில் கூட ஷூட்டிங்கில் தொடங்கலாம் எனவும், அதற்கு முன் மற்ற வேலைகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டு வருவதாக் கூறப்படுகிற்து.

Trending News