அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் சமீபத்தில் சத்தமே இல்லாமல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் பொங்கலுக்கு குட் பேட் அக்லீ படம் தான் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், தற்போது விடாமுயற்சி தான் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி வருகின்றனர்.
மேலும் விடாமுயற்சி படம் பார்பதற்க்கே அமெரிக்கன் ஸ்டைலில் உருவான ஒரு படம் போல இருக்கிறது. மேலும் இது ஒரு ரீமேக் படம் என்றும் கூறப்படுகிறது. இப்படி பட்ட சூழ்நிலையில், குட் பேட் அக்லீ படத்தை பற்றிய ஒரு முக்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வட்டமிட்டு கொண்டிருக்கிறது.
விஜய் டயலாகை பேசிய அஜித்..
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தில் தல அஜித்தின் reference இருக்கும். அது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக அமைந்தது. மேலும் தல ரசிகர்களும் படத்தை ரசிக்கும்படியாக அமைந்தது இந்த நிலையில், அஜித்தும் அதே டெக்னிக்கை Follow செய்திருக்கிறார். குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பில், அஜித் பேசிய ஒரு டயலாக்கை கேட்டு ஒட்டுமொத்த படக்குழுவினரும் கைதட்ட ஆரம்பித்து விட்டனர்.
ஆம்.. விஜயின் மாஸ் ஆன ஒரு டயலாக் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இடம்பெறுகிறது. அதுவும் தல அஜித் தான் அந்த டயலாகை பேசியே இருக்கிறார். விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் ஒரு மாஸ்-ஆன டயலாக் தான் அது. விஜய் அந்த படத்தில், “நீ படிச்ச ஸ்கூல்ல நான் headmaster ” என்று கூறியிருப்பார்.
அந்த டயலாகை அஜித் குட் பேட் அக்லியில் பேசியிருக்கிறார். மேலும் இதோடு சேர்த்து வேறு எதோ ஒரு வார்த்தையும் பயன்படுத்தி இருக்கிறார். இது அங்கு உள்ளவர்களுக்கே ஒரு Fan மொமெண்ட்டாக இருந்துள்ளது. நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.