Simran: ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயம் தான் சிம்ரன் மற்றும் திரிஷாவுக்கு நடந்திருக்கிறது.
இந்த இரண்டு நடிகைகளுமே தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக வருட காலத்திற்கு கனவு கன்னியாக வலம் வந்தவர்கள்.
இருவருக்குமே உடல் கட்டமைப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் சிம்ரன் டான்ஸ் மற்றும் கிளாமரில் த்ரிஷாவை விட ஒரு படி மேல்தான் என்று சொல்ல வேண்டும்.
த்ரிஷா-சிம்ரன் கேரியர்
அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களுக்கு முன்பு பிரஷாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சின்ன கேரக்டரில் திரிஷா நடித்திருப்பார்.
ஆனால் தற்போது த்ரிஷாவின் சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கிறது. இப்போது குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவுக்கு தோழியாக சிம்ரன் நடிக்கிறாராம்.