Ajith: அஜித்தின் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அதற்காக ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நேற்று அஜித் திடுதிப்புன்னு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இனி கடவுளே அஜித்தேன்னு சொல்லாதீங்க. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு என தெரிவித்திருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அவருடைய ரசிகர்கள் செய்யும் அலப்பறை அதிகமாகி விட்டது. பொது இடங்களில் கூட இப்படித்தான் கோஷம் இட்டு வருகின்றனர்.
அது மட்டுமா கல்லூரி மாணவர்கள் அங்கு நடக்கும் விழாக்களில் கூட இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் படி இல்லை என்பதுதான் உண்மை.
சாவகாசமா வந்து அறிக்கை விட்ட அஜித்
அது மட்டும் இன்றி விடாமுயற்சி டீசரில் கூட இதன் தாக்கம் அப்பட்டமாக தெரிந்தது. அதன் பிறகு இந்த கோஷம் இன்னும் அதிகமாகி விட்டது.
அதனால் தான் அஜித் இப்படி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும் இப்படி ஒரு ட்ரெண்ட் ஆரம்பித்த போது அவர் ரசிகர்களை அடக்கி வைத்திருக்க வேண்டும்.
ஆனால் இது நேஷனல் லெவலில் டிரெண்ட் ஆகி முடித்த பிறகு அறிக்கை விடுவது சரி கிடையாது. இது அவர் மீதான விமர்சனத்திற்கு தான் வழிவகுக்கும்.
காது குளிர நல்லா கேட்டு என்ஜாய் செய்துவிட்டு இப்போது ஏன் அறிக்கை விடுகிறீர்கள் என சில நெட்டிசன்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். இனியாவது அஜித் ரசிகர்கள் மாறுவார்களா என்று பார்ப்போம்.