தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வருபவர் தான் நடிகர் பிரபுதேவா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் ஒரு முன்னணி இயக்குனராக தனது முத்திரையை பதித்துள்ளார். தமிழ் இயக்குனர்களில் ஒரு சிலர் மட்டுமே இதர மொழிகளில் இயக்குனராக தங்களை நிலைநாட்டி உள்ளனர். அதில் பிரபுதேவா ஒரு முக்கிய இடத்தில் உள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற போக்கிரி படத்தை ஹிந்தியில் வாண்டட் என்ற பெயரில் இயக்கியதன் மூலம் ஹிந்தி சினிமாவில் பிரபுதேவா இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இப்படம் ஹிந்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் மூலமே பிரபுதேவா முதன்முறையாக சல்மான்கானுடன் கூட்டணி அமைத்தார்.
இவர்களது முதல் கூட்டணியே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தபாங் படம் மூலமாக மீண்டும் கூட்டணி அமைத்தனர். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. ஆனால் இறுதியாக வந்த மூன்றாவது பாகம் ஓரளவிற்கு சுமாரான வெற்றியையே பெற்றது. இதன் பின்னர் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்த பிரபுதேவா கொரியன் படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் ராதே என்ற பெயரில் உருவாக்கினார்.
சல்மான்கான் பிரபுதேவா கூட்டணியில் வெளியான இப்படமும் வெற்றி பெறவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இந்நிலையில்தான் நடிகர் சல்மான்கான் தமிழ் பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் பட ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

தற்போது அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிப்பது உறுதியாகி உள்ளது. பிரபு தேவா இயக்கும் இப்படத்திற்கு “பைஜான்” என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் பைஜான் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு அதே ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.