புதன்கிழமை, ஜனவரி 8, 2025

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம் பிரசாந்த் பீல்ட் அவுட் ஆக, அஜித் – விஜய்க்குத்தான் போட்டி.

இவுங்க ரெண்டு பேரும் ராஜபார்வை படத்துல சேர்ந்து நடிச்சிருந்தாலும், அதுக்கு பிறகு ரெண்டு பேரும் இதுவரை ஒன்னா நடிக்கவே இல்லை. அந்தளவுக்கு அஜித், விஜய் ரெண்டு பேருக்கும் பெரிய மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்க.

இதுல அஜித் ஒரு படி மேல போய் நீங்க உங்க குடும்பத்த, அப்பா, அம்மாவ பாருங்கன்னு தன் ரசிகர் மன்றத்தை கலைச்சிவிட்டுட்டாரு. தன்னை தலன்னு யாரு கூப்பிட வேண்டாமுன்னு சொல்லி, அரசியல் சம்பந்தமா என்னை இழுக்க வேண்டா, என் பெயரை பயன்படுத்த வேண்டான்னு சொல்லிட்டாரு.

இது ரசிகர்களுக்கு கடுப்பா இருந்தாலும், யோசிச்சு பார்த்தா அதுதான் கரெக்ட்ருன்னு தோணும், அதுக்கு அப்புறம் அவர் மேல எல்லாருக்குமே மரியாதை கூடிடுச்சு. அஜித்தும் சினிமாவுல நடிச்சிட்டே, கார் ரேஸிங், பைக் டூரின்னு தான் நினைச்சத பண்ணிட்டு சந்தோசமா இருக்காரு.

விஜய்யின் தவெகவுக்கு அஜித் ஆதரவா? இல்லையா?

ஆனால், விஜய் மக்கள் இயக்கம்னு நடத்தி, படத்திலையும் அரசியல் டயலாக்கலாம் வைச்சிட்டு இருந்தவரு, பிப்ரவரியில சொந்தமா தமிழக வெற்றிக் கழகம்-னு புது அரசியல் கட்சி தொடங்கி, சிவப்பு, மஞ்சல் வண்ணத்துல ஒரு கொடியை அறிமுகம் செஞ்சாரு. அக்டோபர் 27 லில் பிரமாண்டமாக மாநாடு நடத்துனாரு.

இப்ப என்னான்னா, அஜித், விஜய் ரெண்டு பேருக்கும் சினிமாவுலதான் போட்டி, ஆனால் நெசத்துல ரெண்டு பேரு பிரண்ட்ஸ்ன்னு பலர் பேரு சொல்லியிருக்காங்க. ஏன் விஜய்யே மேடையில நண்பர் அஜித்துன்னு தான் சொல்வாரு.

அப்படியிருக்க, அஜித் அடுத்த வருசம் அஜித் கார் ரேஸிங் அப்டீங்கற தன் சொந்த நிறுவனத்த ஐரோப்பியா கார் ரேஸில கலந்துக்க போறாரு. அதுக்காக தன் கார் ரேஸ் டீமையும், தன்போர்ஷே ஜிடி 2 கப் 24 ஹெச் செயல்திறனுள்ள ஸ்போர்ட்ஸ் காரையும் இன்னிக்கு அஜித் அறிமுகம் செஞ்சிருக்காரு. அதை சுரேஷ் சந்திராதான் வெளியிட்டிருக்காரு.

அதுல. தளபதியோட தவெக கொடியின் நிறமும், அஜித்தோட ரேஸிங் காரோட நிறமும் ஒரே மாதிரி இருக்குதுன்னு குழப்பத்தில் நெட்டிசன்ஸ் பேசிக்கிறாங்க. ஆனால், அஜித்துக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். அதேபோல விஜய்யோட ரூட்டும் வேற, அஜித்தோட ரூட்டும் வேற. இருவருடைய சிந்தனையும் வேற வேறன்னும் சினிமா விமர்சகர்கள் சொல்றாங்க.

அதிலையும் அஜித்தோட ரேஸிங் காரிலயும், அவரோட ஜாக்கெட்லையும் தமிழ் நாடு அரசு சிம்பல் இருக்கிறப்போ, நிச்சயமா விஜய் கட்சிக் கொடியை புரமோட் செய்ய வேண்டிய அவசியம் அஜித்துக்கு இல்லவே இல்லைன்னும், அஜித் தனக்கு விரும்பமான நிறத்தை காருக்கு தேர்வு செஞ்சிருக்காருன்னும் பேசிட்டு இருக்காங்க.

ajith, vijay
ajith, vijay

Trending News