புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விடாமுயற்சிக்காக மேடை ஏற போகும் அஜித்.. இனிமே இப்படித்தான்

Ajith: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. வருட கணக்கில் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என ரசிகர்களை ஏங்க வைத்துவிட்டது இப்படம்.

அந்த ஏக்கத்தை எல்லாம் தீர்க்கும் பொருட்டு சமீபத்தில் டீசர் வெளியாகி மிரட்டி இருந்தது. அதை தொடர்ந்து அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்களும் ரசிகர்களை உற்சாகமூட்டி இருக்கிறது.

ஆனால் தற்போது கசிந்துள்ள தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரும் இன்ப அதிர்ச்சி தான். அதாவது விடாமுயற்சி இசை வெளியீட்டு விழாவில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

இப்படி ஒரு செய்தி தற்போது பரவி வரும் நிலையில் ரசிகர்கள் மெர்சலாகி போய் உள்ளனர். பல வருடங்களாக அஜித் பொது விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது.

பல வருட கொள்கையை தளர்த்திய அஜித்

இதை ஒரு கொள்கையாகவே அவர் கடைப்பிடித்து வருகிறார். படத்தில் நடிப்பதோடு சரி மற்ற எந்த பிரமோஷனிலும் அவர் இருக்க மாட்டார் என்பதுதான் முக்கிய கண்டிஷன்.

தயாரிப்பாளர்களும் அவரை கட்டாயப்படுத்துவது கிடையாது. ஆனால் தற்போது அவர் விடாமுயற்சி இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளார்.

அது மட்டும் இன்றி இனிமேல் பொது நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதன்படி டிசம்பர் 31 விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

அதைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என கூறப்படுகிறது. அங்கு அஜித் தன் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் சண்டை அனைவரும் அறிந்தது தான். அதேபோல் எங்கு போனாலும் கடவுளே அஜித்தே என கோஷமிட்டு ஒரு சர்ச்சையையும் ரசிகர்கள் உருவாக்கி இருந்தனர்.

அதற்கு அஜித் அறிக்கை மூலமாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இருந்தாலும் மேடையில் தோன்றி அழுத்தம் திருத்தமாக பேச அவர் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எது எப்படியோ அவருடைய தரிசனத்தை காண ரசிகர்கள் இப்போது ஆர்வத்துடன் இருக்கின்றனர். இனிமேல் அடுத்தடுத்த பொது நிகழ்வுகளில் அஜித்தை நாம் எதிர்பார்க்கலாம்.

Trending News