திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இயக்குனருக்கு கதை சொல்லும் அஜித்.. அதுவும் ஆங்கில பட சிடி உடன் சுற்றி வருகிறாராம்.!

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு ஏகே 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பெரிய குழப்பத்திற்கு பிறகு இப்பொழுது மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். அதற்காக அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தின் கதைக்கான சம்மதத்தை வாங்குவதற்கு மகிழ் திருமேனி ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

ஏனென்றால் இந்த படத்தில் இரண்டு கதைகளை தயார் செய்து அஜித்திற்கு சொல்லி இருக்கிறார். அதில் ஒரு கதை அஜித்திற்கும், தயாரிப்பாளருக்கும் பிடித்துப் போன பிறகு இந்த ப்ராஜெக்ட்டை ஒப்புக்கொண்டு உள்ளார்கள். அதன் பின்னரே ஏ கே 62 படம் தயாராகி வருகிறது.

Also read: ஒரு கட்டத்தில் விக்ரமை தூக்கி விட்ட அஜித்.. இந்தப் படத்துக்கு பிறகு தான் கேரியர் டாப்ல வந்துச்சு

ஆனால் அஜித்திற்கு ஒரு புதிய பழக்கம் இருக்கிறது. அதாவது தனக்கு பிடித்த படத்தின் சிடியை, இவரிடம் வரும் இயக்குனர்களிடம் கொடுத்து அதை பார்க்கச் சொல்வாராம். பின்பு அதே மாதிரி ஒரு கதையை நம்ம பண்ணலாமா என்று கேட்பாராம். இயக்குனர்களும் இவரிடம் மறுப்பு தெரிவிக்க முடியாமல் சரி என்று சொல்லிவிடுவார்களாம்.

இதே போல தான் எச் வினோத்திடம் கூறியிருக்கிறார். அவரும் அந்த சிடியை பார்த்து தான் துணிவு படத்தை கொஞ்சம் மாடுலேஷன் செய்து எடுத்திருக்கிறார். ஆனால் இவர் சொன்ன மாதிரியே அந்த சிடி இவருக்கு ஒர்க்கவுட் தான் ஆகி இருக்கிறது. அதனாலயே இப்பொழுது அஜித் முழுவதுமாக அந்த சிடியை நம்பியே இருக்கிறார் என்று சொல்லலாம்.

Also read: ஐஸ்வர்யா ராய் வேண்டாம்.. அப்பவே அஜித் எடுத்த முடிவைப் பார்த்து மிரண்டு போனார் இயக்குனர்.!

அதனால் ஏகே 62 படத்தில் இருக்கும் மகிழ் திருமேனி இடம் அதே மாதிரி இரண்டு படங்களை காட்டியிருக்கிறார். ஆனால் இவர் அஜித்திடம் ஓபன் ஆகவே பேசிவிட்டார். அதாவது இந்த சிடி படங்களை விட என்னிடம் நல்ல கதைகள் இருக்கு என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பின்னரே அஜித்திடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார்.

ஆனால் அஜித் இப்படி செய்வது சினிமா வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் அவர் பொதுவாகவே எந்த படங்களில் நடிக்க இருந்தாலும் சரியாக முழு கதை கூட கேட்காமல் நடித்துக் கொடுப்பவர். ஆனால் இப்பொழுது ஏகே 62 படத்தில் ஒவ்வொரு விஷயங்களிலும் தலையிட்டு ஒப்பினியன் சொல்லி வருகிறார். ஆக மொத்தத்துல இந்த வருடம் இவரது படம் ரிலீஸ் ஆவது சந்தேகம் தான்.

Also read: கவனமாக காய் நகர்த்தும் அஜித்.. ஏகே 62 தாமதமாக வெளிவர இது தான் காரணம்

Trending News