Actor Ajith: துணிவு படம் வந்த சூட்டோடு அடுத்த படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்த அஜித் அதற்கான வேலையையும் தொடங்கினார். ஆனால் எந்த பக்கம் போனாலும் கேட் போட்ட கதையாக இருக்கிறது விடாமுயற்சி படத்தின் நிலைமை. எப்படியோ இயக்குனரை முடிவு செய்து படத்தின் பெயரையும் அறிவித்து விட்டார்கள்.
ஆனால் படத்தை தொடங்கும் வேலையை தான் காணும். லைக்கா ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்க அஜித் எல்லாத்தையும் சரி செய்துவிட்டு வாங்க என்ற ரீதியில் தன் வேலையை பார்த்து வருகிறார். இதனால் பாவம் அவருடைய ரசிகர்கள் தான் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கின்றனர்.
Also read: வடிவேலு செய்த அடாவடிகள்.. எவ்வளவோ பொருத்தம் ரெட் கார்டு கொடுத்ததற்கு பின்னணியான 5 விஷயங்கள்
எப்ப தான் விடாமுயற்சியை ஆரம்பிப்பீங்க என்று சோசியல் மீடியாவில் தினமும் கதறி வரும் ரசிகர்கள் இப்போது உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற ரேஞ்சில் ஒரு விஷயத்தை செய்து இருக்கின்றனர். அதாவது நீங்க ஆரம்பிக்க வேண்டாம் நாங்களே தொடங்கி வைக்கிறோம் என ஒரு போஸ்டரை ரெடி செய்து மீடியாவில் ட்ரெண்ட் வருகின்றனர்.
அதில் அஜித் தலையில் குடுமி, கையில் ரக ரகமான துப்பாக்கி என டெரர் லுக்கில் மிகவும் தோரணையுடன் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் புலி, புறா போன்ற விஷயங்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இது லியோவுக்கு போட்டி என சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது. ஏனென்றால் அப்படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
Also read: விஜய்க்கு போட்டியாக இறங்க நேரம் பார்க்கும் அஜித்.. ரமேஷ் கண்ணா வைத்த ட்விஸ்ட்
சமீபத்தில் கூட போஸ்டர், முதல் பாடல் என கலக்கி கொண்டிருக்கும் லியோவை பார்த்து இப்போது அஜித் ரசிகர்களும் விடாமுயற்சிக்கான போஸ்டரை தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர். இதை பார்த்தாவது லைக்கா படப்பிடிப்பை ஆரம்பிக்குமா என்ற ஒரு நப்பாசையில் தான் ரசிகர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.
ஆனாலும் பட குழுவினரிடமிருந்து எந்தவிதமான ஆறுதல் செய்திகளும் இப்போது வரை வரவில்லை. இதனாலேயே இப்போது ரசிகர்கள் பயங்கர கடுப்பில் இருக்கின்றனர். இருப்பினும் இந்த வருட இறுதிக்குள் இப்படத்தை ஆரம்பித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒவ்வொரு நாளையும் கழித்து கொண்டு இருக்கின்றனர்.
ரசிகர்கள் தயார் செய்த போஸ்டர்
