திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யின் அரசியல் விளம்பரத்தை தடுத்த அஜித்.. இயற்கையாகவே இது நடந்து விட்டது..!

Ajith unexpectedly stops Vijay’s political promotion: தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி -கமல், அஜித் -விஜய், என காலம் காலமாக போட்டி தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதில்  ரஜினி மற்றும் அஜித்தை தவிர அனைவரும் அரசியலில் குதித்து வெற்றி தோல்வியை ருசித்த போதும் இவர்கள் இருவரும் மட்டும் சினிமாவே போதும் என்று அரசியல்வாடை படாமல்  ஒதுங்கிப் போயினர். 

பல ஆண்டு காலமாக அரசியலுக்கு அடி போட்டு இருந்த விஜய், சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சியை அறிவித்து, இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளை ஆட்டம் காண வைத்தார். அவர்கள் வெளிப்படையாக விஜய் அரசியலுக்கு வருவது அவர் உரிமை. எங்களுக்கு பயமில்லை என்று கூறினாலும் உள்ளூர பயந்து நடுங்கி தான் போய் உள்ளார்கள். 

Also read: விஜய் மகனை தூண்டி விட்ட ஷாலினி.. அரசியலில் தளபதிக்கு ஏற்படப்போகும் அவமானம்!

நேர்மையுடன் கூடிய தமிழக முன்னேற்றத்திற்கான செயல்பாடுகள், ஊழலற்ற அரசியல் என தனது கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் பொருட்டு மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலமாக பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் விஜய். முதல் கட்டமாக தனது கட்சி செயலியை அறிமுகப்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை ஊக்குவித்து வருகிறார்.  இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என டார்கெட் வைத்து செயல்படும் விஜய்க்கு பலவகையிலும் ஆப்பு குவிந்து வருகிறது.

விஜய்யோட எந்த அப்டேட் வந்தாலும் அதை கூலா க்ளோஸ் பண்ணி விடுவார் அஜித். அதேபோல இப்ப விஜய் அரசியல் ஆப் கிரியேட் பண்ணி மக்களுக்காக கொடுத்துள்ளார் ஆனால் அது கொஞ்சம் கம்மியா பேசப்பட்டது ஏன்னா மொத்த மீடியாவும் அஜீத்தின் ஆபரேஷனையும் அஜித் நண்பர் மற்றும் விடாமுயற்சியின் கலை இயக்குனர் மிலனின் இறப்பை பற்றி தீவிரமாக பேசி வருவதால் இந்த ஆப் விஷயம் மக்களிடையே முழுமையாக போய் சேரவில்லை என்பது தமிழக வெற்றி கழகத்தின் ஆதங்கம். 

இவையவையும் திட்டம் தீட்டி நடப்பதில்லை! தானாக நடக்கிறது. அஜித் என்ன செய்வார் பாவம். ஆனால் விஜய்யின் அரசியல் கட்சியையும், மின்னல் வேகத்தில் அவர் எடுக்கும் முனைப்பையும் பார்க்கும் மற்ற கட்சிகள் பீதியில் அரண்டு போய் உள்ளனர். மாற்று சக்தியை எதிர்பார்க்கும் தமிழக மக்கள், விஜய்யின் கொள்கைகளால் ஈர்க்கப்படும் பட்சத்தில் எம்ஜிஆரை போன்று தவிர்க்க முடியாத தலைவராக தளபதி முன்னேறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Also read: மூளையில கட்டியா.? அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட அடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட் இதுதான்

Trending News