Good Bad Ugly Teaser: அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் காலையிலிருந்து எதிர்பார்த்த குட் பேட் அக்லி டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி உலக அளவில் வெளியாகிறது.
விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை அதிகரிக்கும் வகையில் டீசரில் ஒவ்வொரு காட்சிகளும் உள்ளது.
அதன்படி அஜித்தின் வெரைட்டியான அவதாரங்கள் இதில் காட்டப்பட்டுள்ளது. ஏகே ஒரு ரெட் டிராகன் என்ற வசனத்துடன் ஆரம்பிக்கிறது இந்த டீசர்.
குட் பேட் அக்லி டீசர் எப்படி இருக்கு.?
அதை அடுத்து பல கெட்டப்புகளில் வருகிறார் அஜித். பில்லா, ரெட், வாலி, அமர்க்களம் என அவரின் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது.
இதிலிருந்து ஆதிக் ஃபேன் பாய் சம்பவம் செய்திருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ஒவ்வொன்றும் நச் ரகம்.
மேலும் பின்னணி இசை, ஆக்சன் சீன் என கொல மாசாக இருக்கிறது டீசர். அதை இப்போது வெறித்தனமாக கொண்டாடி வரும் அஜித் ரசிகர்கள் ஏப்ரல் 10 சம்பவம் உறுதி என தெறிக்க விடுகின்றனர்.