வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் எடுத்த வரை வலிமை படத்தை பார்த்துவிட்டு அஜித் அப்செட்டில் இருப்பதாக வலைபேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோ ஒன்றில் சர்ச்சையான பதிவை பதிவிட்டுள்ளனர்.
தல அஜித் நடிப்பில் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகும் திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
ஆரம்பத்தில் வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்சன் அதிரடிகளாக இருக்கும் என செய்திகள் பரவி வந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை விட சென்டிமெண்ட் பிரமாதமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
சரி ஓகே என்ன தல அஜித் ரசிகர்கள் கமர்சியல் படமாக இருக்கும் என மனதை தேற்றிக் கொண்டனர். ஆனால் தற்போது வினோத் இதுவரை எடுத்துள்ள வலிமை படத்தை போட்டு காட்ட சொல்லிய தல அஜித் படம் பார்த்துவிட்டு அப்படியே அப்செட் ஆகி விட்டாராம்.
வலிமை படம் முழுக்க முழுக்க மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸ்களுக்காக மட்டுமே உருவாக்கியது போல் உள்ளதாம். பெரிய அளவு காமெடி இல்லை, கமர்சியல் அம்சங்கள் சுத்தமாக இல்லை என வினோத்திடம் கூறினாராம் தல அஜித். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகம் போல் உருவாகியுள்ளதாம்.
பெரிய அளவு கமர்சியல் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளதால் அஜித்துக்கே வலிமை படம் வித்தியாசமான படமாக தெரிகிறதாம். இதன் காரணமாக சில காட்சிகளை எடுத்துவிட்டு முடிந்தளவு கமர்சியல் அம்சங்கள் கொஞ்சம் சேர்க்க முடியுமா என்று பாருங்கள் என வினோத்துக்கு கோரிக்கை வைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.