Ajith-Vijay: அஜித்தின் விடாமுயற்சி பல தடைகளை தாண்டி நேற்று வெளியானது. லைக்கா தயாரிப்பில் திரிஷா, அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது.
அதனாலேயே நேற்று சோசியல் மீடியா ரணகளமாக இருந்தது. அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி விஜய் ரசிகர்கள் கூட படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனாலும் சில ரசிகர்கள் மாற்றி மாற்றி மோசமான கமெண்ட்டுகளை போட்டு ட்ரோல் செய்து வந்தனர். அதில் விஜய் குறித்து ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது.
அதாவது விடாமுயற்சி கதையே விஜய்க்கு சொல்லப்பட்ட மெசேஜ் தான். டைவர்ஸ் கேட்கும் பொண்டாட்டியை சமாதானப்படுத்துவது தான் படத்தின் மையக்கரு.
விஜய்க்கு சொன்ன மெசேஜ் தான் விடாமுயற்சியா.?
படத்தை பார்க்கும் போது விஜயை சீண்டியது போல் தான் இருந்தது என ரசிகர்கள் இப்போது கமெண்ட் கொடுத்து வருகின்றனர். சமீப நாட்களாகவே விஜய் குடும்ப விவகாரம் சர்ச்சையாக மாறி இருக்கிறது.
அவர் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்று கூட செய்திகள் வெளிவந்தது. அதையும் விடாமுயற்சி கதையையும் முடிச்சு போட்ட ரசிகர்கள் தற்போது இப்படி ஒரு வேலையை பார்த்துள்ளனர்.