வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கடவுளே அஜித்தே, ஒருவழியா கிடைத்த தரிசனம்.. ரிலீஸ் தேதியோடு வெளியான விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு.?

Vidaamuyarchi Teaser: விடாமுயற்சி படம் கடந்த வருடமே தொடங்கப்பட்டாலும் மாத கணக்கில் படப்பிடிப்பு இழுத்தடித்து வந்ததில் ரசிகர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். கடவுளே அஜித்தே உங்க தரிசனம் எப்ப கிடைக்கும் என கேட்டபடி இருந்தனர்.

அதன் பலனாக நேற்று இரவு 11.08 மணிக்கு விடாமுயற்சி டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறிருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் வெளியான அந்த டீசர் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக உள்ளது.

ஏற்கனவே இப்படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தது. தற்போது டீசரை பார்க்கும்போது அது உறுதியாகி இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் காட்சிகள் ஒவ்வொன்றும் அனல் பறக்கிறது.

ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த விடாமுயற்சியின் அஜித்

இதன் ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கார் டிக்கியில் இருந்து ஒரு மனிதனை இழுத்து கீழே போடுகின்றனர். அதை தொடர்ந்து ரெஜினா, அர்ஜுன் இருவரும் ஒரு கேங் ஆக இருப்பதுபோல் காட்டப்படுகிறது.

இதற்கு அடுத்த அஜித் திரிஷாவின் காட்சிகளில் தொடங்கி ஒவ்வொரு சீனும் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. த்ரிஷாவை ஒரு கும்பல் கடத்தி விட மனைவியை அஜித் தேடி கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.

அதற்கு ஏற்ப ஆக்சன் காட்சிகள், பின்னணி இசை அனைத்தும் மிரட்டல் ஆக இருக்கிறது. இப்படியாக ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் அஜித். மேலும் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு பதிலாக வரும் 2025 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளது பட குழு.

Trending News