ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜித்தின் விடாமுயற்சியின் ஸ்டோரி இதுதான்.. அப்செட்டில் இருக்கும் மகிழ்திருமேனி

தமிழகத்தில் கிங் ஆப் ஓப்பனிங் கொடுப்பது அஜித் தான். அவர் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கப்பட்டு 6 மாதம் இடைவெளி இன்றி ஒரே செட்யுலில் படத்தை முடித்து விட பட குழு திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில் விடாமுயற்சி படத்தின் ஸ்டோரி இப்படித்தான் இருக்கும் என்பது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதனால் மகிழ்திருமேனி பயங்கர அப்செட்டில் இருக்கிறார். இதுவரை மகிழ்திருமேனி டாப் நடிகர்களை வைத்து இயக்கவில்லை என்றாலும் அவருடைய படங்கள் அனைத்தும் பெரிதும் பாராட்டக்கூடிய படங்களாகத்தான் அமைந்திருக்கிறது.

Also Read: 14 வயதில் அஜித்துக்கு ஜோடியான நடிகை.. பள்ளி மாணவியை ஹீரோயின் ஆக்கிய இயக்குனர்

இவருடைய படங்கள் ஆக்சன் மற்றும் இன்டெலிஜென்ஸ் திரில்லர் கலந்த படமாக இருப்பதால் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் தான் இப்போது அஜித்தின் விடாமுயற்சியை இயக்குவதற்கான வாய்ப்பு மகிழ்திருமேனியை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சியின் டைட்டிலை வைத்து பார்க்கும்போது, இதில் அஜித் ஒரு விஷயத்தில் ஒரே முறையில் வெற்றி பெறாமல் பல அட்டம்ட்டுகளை எடுத்து கடைசியில் விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவது தான் இந்த படத்தின் மைய கருவாக இருக்கும்.

ஏதாவது ஒரு மிஷனை அஜித் கையில் எடுத்து பல முறை தோல்வியை சந்தித்து கடைசியில் கிளைமாக்ஸில் விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவது தான் இந்த படத்தின் கதை. அது மட்டுமல்ல ஒரே முயற்சியில் சக்ஸஸ் கிடைத்துவிட்டால் விடாமுயற்சிக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

Also Read: விடாமுயற்சி வில்லனை உறுதி செய்த மகிழ்த்திருமேனி.. அவரே வெளியிட்ட பரபரப்பான பதிவு

முன்பெல்லாம் அஜித்தின் படங்களுக்கு அவர் படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை தான் டைட்டிலாக வைப்பார்கள். அதை நிறுத்திவிட்டு சமீப காலமாகவே வீரம், விவேகம், விஸ்வாசம், வலிமை அதன் தொடர்ச்சியாக இப்போது விடாமுயற்சி என பாசிட்டிவான வைப்ரேஷன் இருக்கக்கூடிய டைட்டிலை அஜித் தேர்வு செய்கிறார்.

இதனால் ரசிகர்களுக்கும் ஒரு விதமான பாசிட்டிவிட்டி இருக்கும் என்று அஜித் நம்புகிறார். இப்போது விடாமுயற்சியின் கதை எப்படி இருக்கும் என்பது ஓரளவு ரசிகர்களுக்கு தெரிந்து விட்டதால் பட குழு படத்தில் நிச்சயம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கின்றனர்.

Also Read: அஜித்தை பாலோ செய்யும் விஜய் சேதுபதி.. சத்தமே இல்லாமல் அவர் செய்யும் வேலை

Trending News