திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2025

விஜய்க்கு போட்டியா அஜித் தரப்பிலிருந்து பண்ணும் அரசியல்.. போலி சினிமா உலக ராஜாக்களின் மறைமுக சேட்டை

அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ஆனந்த விகடனுக்கு பிரத்யேக பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அஜித்  மற்றும் விஜய்  இருவரும் நெருங்கிய நண்பர்கள். மாதம் ஒரு முறையாவது ஃபோனில் பேசிக் கொள்வார்கள். என்றெல்லாம் அவர்களுக்கு இடையில் இருக்கும் நட்பை போற்றி வருகிறார்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது முதல் ஆளாக அஜித் போன் செய்து வாழ்த்து கூறினார் என்றும், அதை போல் அஜித் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகும், அவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்த பின்னரும் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார் என்றெல்லாம் சுரேஷ் கூறுகிறார். 

இந்த நேர்காணல் ஆனந்த விகடன் டாட் காம் இல் இருக்கிறது. இப்போது ஏன் இதைப் பற்றி கூறுகிறார் என்றெல்லாம் யோசிக்கும் போது விடாமுயற்சி படத்திற்கு பின்னால் உள்ள ஒரு பெரிய அரசியல் தான் மனதில் தோன்றுகிறது.

எப்பொழுதுமே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். இப்பொழுது அஜித்தின் விடாமுயற்சி படம்  பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு விஜய்  ரசிகர்கள் தரப்பிலிருந்து நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப கூடாது என்பதற்காகவும், அவர்களையும் அஜித் பக்கம் ஆதரவாக  நிற்பதற்கும்  தான் இந்த சுரேஷ் சந்திராவின் பேட்டி என்கிறார்கள்.

அஜித் மற்றும்  விஜய் இருவரும் உண்மையாக நண்பராக இருந்திருந்தால் வெளிப்படையாக பேசிக் கொள்ளலாம் ஆனால் ஏன் இப்படி ஒருவருக்கொருவர் மறைமுகமாக மட்டும் பாராட்டி கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கே இரு தரப்பு ரசிகர்களும் அடித்துக் கொள்கிறார்கள்.   இவர்கள் வெளிப்படையாக இருந்திருந்தால், இங்கே ரசிகர்கள் சண்டை சச்சரவு  இல்லாமலாவது  இருந்திருப்பார்கள். 

Trending News