வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அஜித்துக்கு போன் போட சொன்ன விஜய்.. அரசியலை ஆட்டம் காண வைக்க போகும் சம்பவம்

Ajith-Vijay: தமிழ் சினிமா உலகின் ஜாம்பவான்களாக இருக்கும் கமல் மற்றும் ரஜினி பொதுவெளியில் பேசிக்கொள்வது, ஒரே மேடையில் பார்ப்பது என்பது எப்போதும் நடக்கும் விஷயம். சமீபத்தில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனால் விஜய் மற்றும் அஜித்தை ஒன்றாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது குறிஞ்சி பூ போன்றது.

சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் போனில் பேசிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர்கள் போட்டி இருக்கும் பிளான் சக்சஸ் ஆனால் அது தமிழ்நாட்டு அரசியலை கண்டிப்பாக உலுக்கி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அப்படி எதற்காக இவர்கள் இருவரும் பேசி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. அரசியல் என்பதை தாண்டி, சினிமாவில் கருணாநிதியின் பங்கை பற்றி எடுத்து சொல்ல பெப்சி நிறுவனம் விழா வைக்க இருக்கிறது. இந்த விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கலைஞர் 100 என இந்த விழாவிற்கு பெயர் வைத்திருப்பதாக ஆர்கே செல்வமணி அறிவித்திருக்கிறார்.

Also Read:அஜித், விக்ரம் தூக்கி எறிந்த 5 படங்கள்.. வம்படியாய் ஐந்தையும் வாங்கி ஜெயித்த ரோலக்ஸ்

சினிமா துறையினரால் கருணாநிதிக்கு கொண்டாடப்படும் விழாவில் அனைத்து கலைஞர்களும் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என பெப்ஸி சங்கம் அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கு வசதியாக வரும் 23 மற்றும் 24ம் தேதி படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது என்ற அறிவிப்பையும் அந்த சங்கம் வெளியிட்டு இருக்கிறது.

அஜித்துக்கு போன் போட்ட விஜய்

இந்த விழாவில் கமல் மற்றும் ரஜினி பங்கெடுக்க போவது உறுதியாகி இருக்கிறது. நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆர் கே செல்வமணி தெரிவித்திருக்கிறார். இதற்காக விஜய், அஜித்தை போனில் அழைத்து விழாவில் பங்கெடுப்பதை பற்றி பேசி இருக்கிறாராம். இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம்

அஜித் மற்றும் விஜய் ஒரே மேடையில் சந்தித்து விட்டால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அவர்கள் கையில் தான் இருக்கும். இந்த சந்திப்பின் போது விஜய் தன்னுடைய அரசியல் நகர்விற்கு அஜித்திடம் ஆதரவு கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே நம்ம மட்டும் தான் கிங் என்பதை நிரூபிப்பதற்காக இவர்கள் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

Also Read:விஜய்யை மிஞ்சி சொத்து சேர்த்து வைத்திருக்கும் காமெடியன்.. ஒரு படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா!.

Trending News