புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வினோத் கூட்டணிக்கு டாட்டா.. சைடு கேப்பில் அஜித்தை கவுத்திய பிரபல இயக்குனர்

அஜித் எப்போதுமே தன்னுடன் பணியாற்றும் இயக்குனரை பிடித்து விட்டால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கொடுத்துவிடுவார். அந்த வகையில் ஏற்கனவே அஜீத்தின் விருப்ப இயக்குநர் லிஸ்டில் இருந்த சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித்தை வைத்து நான்கு படங்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அஜித்தின் விருப்பப் பட்டியலில் இணைந்த வினோத் நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு வலிமை படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இந்த கூட்டணி இணைய உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனக்கு வெற்றிப்படம் கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து படம் செய்ய உள்ளாராம் தல அஜித். அந்த படத்திற்கு இயக்குனராக சுதா கொங்கராவை தேர்வு செய்துள்ளாராம்.

கடந்த சில மாதங்களாகவே அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தின் அறிவிப்புகள் வெளிவரும் என செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து தல ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அடங்கியது.

ஆனால் கடந்த சில மாதங்களாக சத்ய ஜோதி நிறுவனத்திற்காக சுதா கொங்கரா சென்று அஜித் படத்தின் கதை விவாதங்களில் ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கராவின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் கண்டிப்பாக அஜித்தும் அந்த படத்தில் இணைந்தால் படத்தின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ajith-vinoth-cinemapettai
ajith-vinoth-cinemapettai

Trending News