Ajith: எல்லோரும் ஜெட் வேகத்தில் நடித்துக் கொண்டு வரும் பொழுது அஜித் மட்டும் ஏன் இவ்வளவு ஸ்லோவாக இருக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த வருடம் பொங்கலை ஒட்டி வெளிவந்த துணிவு படத்திற்கு பிறகு இப்பொழுது வரை எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. கமிட்டான விடாமுயற்சி படமும் இழுவையாக இழுத்து அடித்துக் கொண்டு வருகிறது.
ஆனால் அதற்குள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆகி முதற்கட்ட படப்பிடிப்பாக கடந்த மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கி விட்டார். ஏற்கனவே ஆதிக், விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவை வைத்து எடுத்த மார்க் ஆண்டனி படம் அனைத்து தரப்பில் உள்ள ரசிகர்களையும் குஷிப்படுத்தி விட்டது. அதே மாதிரி அஜித்துடன் வைத்த கூட்டணியும் நிச்சயமாக வெற்றி கொடுக்கும் என்று அஜித் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து திருப்பதிக்குப் போன அஜித்
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இதற்கிடையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கமிட்டான விடாமுயற்சி படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 90% ஷூட்டிங் முடித்து விட்டது. இதில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா கமிட் ஆகி இருக்கிறார். இன்னும் மீதமுள்ள கதையை முடித்துவிட்டு வருகிற தீபாவளி அன்று அனைத்து திரையரங்களையும் அலங்கரித்து விடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.
இப்படி இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அஜித் அவ்வப்போது அவருடைய புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ள வேஷ்டி, வெள்ளை சட்டை போட்டு திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்ய இன்று போயிருக்கிறார்.
அங்கே போன அஜித்தின் புகைப்படம் வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் வெற்றிக்காக மிகப்பெரிய வேண்டுதலை வைத்திருக்கிறார்கள் என்று கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் நிச்சயம் விடாமுயற்சி படம் திரைக்கு வந்து விடும் என்று தோன்றுகிறது.
மேலும் அந்த இடத்தில் அஜித்தை பார்த்த ரசிகர் ஒருவர் அஜித்துக்கு பெருமாள் சிலையை பரிசாக கொடுத்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட்
- Ajith: விடா முயற்சிய ஆண்டவன் தான் காப்பாத்தணும்
- ஒரே நாளில் கங்குவாவுடன் மோதும் விடாமுயற்சி
- Ajithkumar: உறுதியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் ரிலீஸ் தேதி..