ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஓவர் கான்ஃபிடன்ஸில் விக்னேஷ் சிவன் செய்த வேலை.. செம டோஸ் விட்ட அஜித்

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித், வினோத் இயக்கத்தில் மீண்டும் ஏகே 61 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை அடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

முதல் முறையாக இணையும் இந்த கூட்டணி குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் அஜித், விக்னேஷ் சிவன் தயார் செய்த ஸ்கிரிப்ட்டை பார்த்து மிகவும் கோபம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நானும் ரவுடிதான், காத்துவாக்குல 2 காதல் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து படம் இயக்குவதற்காக நிறைய மெனக்கெட்டுள்ளார். அதற்காக அவர் கதையை பார்த்து பார்த்து ரெடி செய்தாராம். இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கமல் கெட்ட வார்த்தை பேசுவதை பார்த்து இந்த படத்திலும் அப்படிப்பட்ட வசனங்களை எழுதி இருக்கிறார். பாசிட்டிவ் கேரக்டர்களே இதுபோன்ற வார்த்தைகளை பேசும்போது, நெகட்டிவ் கேரக்டருக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று அவர் இன்னும் சில ஆபாச வார்த்தைகளையும் சேர்த்து எழுதி இருக்கிறார்.

இதைப் பார்த்து கடுப்பான அஜித் எதற்காக தேவையில்லாமல் இதுபோன்ற வார்த்தைகளை வைத்துள்ளீர்கள், உடனே அதை நீக்குங்கள் என்று விக்னேஷ் சிவனை கூப்பிட்டு எச்சரித்துள்ளார். அந்த கேரக்டருக்கு மாஸாக இருக்கும் என்று நினைத்து செய்த வேலை அஜித்துக்கு பிடிக்காமல் போனதில் அவர் ரொம்பவும் வருத்தம் அடைந்துள்ளார்.

அதைப் பார்த்த அஜித் இதுபோன்ற வார்த்தைகளை படத்தில் வைத்தால் நன்றாக இருக்காது. மேலும் சென்சாரில் இந்த வார்த்தைகளை மியூட் செய்துவிடுவார்கள். அதனால் இது போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவது நல்லது என்று எடுத்துக் கூறியிருக்கிறார். அதன்பிறகு விக்னேஷ் சிவன், அஜித் சொன்னது போன்று வசனங்களை மாற்றி எழுதி கதையை ரெடி செய்து வருகிறாராம்.

Trending News