அஜித் வளர்ந்து வரும் கால கட்டங்களில் ஹீரோவாக மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அதாவது இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ளார்.
அந்த வகையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான நீ வருவாய் என, கார்த்தி நடிப்பில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
அதில் 1998 ஆம் ஆண்டு கார்த்தி, ரோஜா நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். இந்த படம் அன்றைய கால பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வெற்றியைப் பெற்றது.
இந்த படத்தில் ரோஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபராக தல அஜித் நடித்திருப்பார். இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் அஜித் ஒப்பந்தமாகவில்லை.
அஜித்துக்கு பதிலாக அன்றைய காலகட்டத்தில் அஜித்தை விட சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் அப்பாஸ்தான் நடிக்கவிருந்தார். இவர் ஹீரோவாக நடித்ததை விட குணச்சித்திர நடிகராக நடித்த படங்கள்தான் அதிகம்.
எந்த அளவுக்கு பிஸியான குணச்சித்திர நடிகர் என்றால் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டபோது அவரது கால்ஷீட் பிரச்சனையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் பிறகுதான் அஜித் உள்ளே வந்துள்ளார். இந்த தகவலை பிரபல இயக்குனர் சித்ரா லட்சுமணன் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
