திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெப் தொடரில் நடிக்கப்போகும் அஜித்.. Professor அவதாரம் எடுக்க போகும் தல

கடந்த 2 வருடமாக தல அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. முதலில் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தான் வெளியாகவிருக்கிறது. மேலும் இந்த படத்துக்கு இன்னும் 7 நாள் ஷூட்டிங் மிச்சம் உள்ளதாகவும் தயாரிப்பு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இந்த நிலையில், தல அஜித் தனது passion-லும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கவனம் செலுத்தி வருகிறார். தல அஜித் அடுத்த ரெண்டு படங்களையும் சீக்கிரம் முடித்துவிட்டு கார் ரேஸ்-க்கு செல்லவிருக்கிறார். அதற்கான ஏற்பாடு ஒரு புறம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தல அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார். நாம் எத்தனையோ ஹாலிவுட் வெப் தொடர்கள் பார்த்து ரசித்திருப்போம். இப்படியான ஒரு கதையம்சம் ஏன் தமிழில் இல்லை என்றும் வியந்திருப்போம். அந்த குறையை தீர்ப்பதற்கு நடிகர் அஜித் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

Money heist வெப் தொடரில் நடிகர் அஜித்

ஏற்கனவே, அவர் வேர்ல்ட் டூர் போவதை ஒரு டாக்குமெண்டரியாக படமாக்க முடிவு செய்திருந்தார். அதற்கான பணிகளும் ஒரு புறம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்க்கு நடுவில், பிரேக்கிங் பாட், மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர்கள் போல நல்ல திரில்லர் வெப் தொடர்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தற்போது இதற்கான கதை கேட்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. மேலும் இந்த தொடரை OTT-யில் வெளியிடுவதன் மூலம், தனக்கு உலகளாவிய ரசிகர்களை உருவாக்கவும் அஜித் திட்டமிட்டுள்ளார். அவர் இனி படம் நடிக்க போவதில்லை என்ற செய்தி ஒருபுறம் பரவ, தற்போது இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Trending News