வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யை சந்திக்க கேரவனுக்கு வெளியில் காத்திருந்த அஜித்.. பதட்டத்தில் தளபதி என்ன சொன்னார் தெரியுமா.?

Actor Vijay: இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இப்போது ஜாக்பாட் அடித்தது போல் தளபதியின் 68வது பட வாய்ப்பு இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்போதுமே சீரியஸாக நடித்துக் கொண்டிருந்த விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு ஜாலியான படத்தை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு லியோ ரிலீஸுக்கு பின்பு துவங்கப்பட்ட வரும் 2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் வெங்கட் பிரபு அளித்த சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நெகட்டிவ் ஹேடில் நடித்து ஹிட் கொடுத்த படம் தான் மங்காத்தா.

Also Read: தீவிர அரசியலில் கால் பதிக்கும் விஜய்.. திடீர் முடிவால் பயத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்

மங்காத்தா படப்பிடிப்பு நடக்கும் பொழுது பக்கத்தில் விஜய்யின் வேலாயுதம் படத்திற்கான படப்பிடிப்பும் நடந்துள்ளது. இதை அஜித்திடம் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அத்துடன் வெங்கட் பிரபு அஜித்திடம், ‘நீங்கள் இருவரும் சேர்ந்து என்னுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என்று கூறியதும் அஜித், ‘அதற்கென்ன சரி’ என்று சொல்லிவிட்டதும் அதிரடியாக விஜய்யை பார்க்கவும் கிளம்பி விட்டாராம்.

அஜித்தும், வெங்கட் பிரபுவும் பக்கத்து செட்டிற்கு நடந்து போய் வேலாயுதம் படப்பிடிப்புக்கு விஜய்யை பார்க்க சென்றனர். அப்பொழுது அவர் கேரவனில் இருந்துள்ளார். அஜித் அதை பெரிது படுத்தாமல் கேரவனுக்கு வெளியில் விஜய்க்காக காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த விஜய் பதட்டத்தில், ‘அண்ணா! என்ன வெளியில் நிற்கிறீங்க, உள்ள வாங்க’ என்று உள்ளே அழைத்தார்.

Also Read: மீண்டும் மீண்டும் விஜய் மானத்தை வாங்கும் எஸ்.ஏ.சி.. 78வது பிறந்த நாளின் ஷாக்கிங் புகைப்படம்

அதற்கு அஜித், வெங்கட் பிரபுவுக்கு நாம் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுக்க ஆசை, அதனால் அவருடன் நான் வந்தேன் என்று அவரே பேசினார். வெங்கட் பிரபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் ஆசைப்பட்டதை அஜித் சொல்லி, விஜய்யும் ஒத்துக் கொண்டுள்ளார் என இருவருக்கும் உள்ள நட்பை வியந்து பார்த்துள்ளார்.

இந்த சுவாரசியமான நிகழ்வை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு வெளிப்படுத்தி தல, தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். இவர்கள் மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதை போல திரையில் மோதிக்கொள்ளும் அஜித், விஜய் உண்மையாலுமே நல்ல நண்பர்கள் என பலமுறை பல பிரபலங்கள் சொல்லினாலும் இந்த நிகழ்வு சிறந்த உதாரணமாகும்.

Also Read: நடிப்பை தாண்டி படிப்பிலும் பட்டம் வாங்கிய 5 ஹீரோக்கள்.. படிப்பு ரொம்ப முக்கியம் பிகிலு!

Trending News