தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. ஆனால் அதன்பிறகு வலிமை படம் நீண்ட நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறது.
நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் இணைந்து நடித்து வரும் படம் வலிமை. சமீபத்தில்தான் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை தான். அந்த வகையில் இந்த வருடத்திற்குள் எப்படியாவது படம் வெளியாகிவிடும் என தல ரசிகர்கள் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது மற்ற நடிகர்களைப் போல அஜித்தும் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக நடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அப்படி அஜித் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து நடித்தாலும் பாதி படம் மட்டுமே ஒல்லியாக தெரிகிறார்.
மீதி படத்தில் அவரது தோற்றம் குண்டாக மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை அவருடன் அவள் வருவாளா படத்தில் நடித்த பிரித்திவிராஜ் என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அஜித்துக்கு முதுகில் பிரச்சனை இருப்பதால் அவரால் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட முடியாது. இதன் காரணமாகவே அவரே நினைத்தாலும் அவரது உடல் எடையை அவ்வளவு எளிதில் குறைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.