வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அடேங்கப்பா! இத்தன கெட்ட வார்த்தையா? இவ்வளோ பீப் சவுண்ட்டா.? மோசமான கெட்டவனாக மாறிய அஜித்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்தின் ஒரு அப்டேட்டுக்காகவே ரசிகர்கள் தவமாய் காத்திருந்தனர். அதிலும் துணிவு படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்தனர். இப்படி பல தாமதங்களுக்கு பிறகு முதல் பாடல் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது.

ஆனால் அதன் பிறகு எல்லாமே அதிரடி தான் என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகள் குவிய ஆரம்பித்தது. இரண்டாம் பாடல், மூன்றாம் பாடல் என ஒவ்வொன்றும் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அது மட்டுமல்லாமல் வருடத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 அன்று துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் அனல் பறக்க வெளியானது.

Also read: அஜித்தை தாறுமாறாய் பேசி வம்புக்கு இழுத்த தங்கர்பச்சான்.. கோடி சம்பாதிச்சும் நல்ல மனசு இல்ல

இப்படம் ஆக்சன் திரைப்படம் தான் என்று பலரும் எதிர்பார்த்திருந்தாலும் ட்ரைலரின் ஒவ்வொரு காட்சியும் படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லாமலே சொல்லியது. அதனாலேயே வாரிசு திரைப்படம் போட்டிக்கு இருந்த போதிலும் ஒரு கை பார்க்கலாம் என்ற துணிவுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் துணிவு திரைப்படம் நிச்சயம் இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் மற்றொரு அப்டேட் இப்போது வெளிவந்துள்ளது. அதாவது சமீப காலமாக அதிக நேரம் ஓடும்படியாக இருக்கும் படங்களை ரசிகர்கள் ரசிப்பதில்லை. அதனாலேயே பல திரைப்படங்களின் நேரம் வெளியீட்டிற்கு பிறகு கணிசமாக குறைக்கப்படுகிறது. வலிமை திரைப்படத்திலும் இது நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: அஜித் வெற்றிக்கு இவர்தான் முதல் காரணமே.. 20 ஆண்டுகளில் ஆலமரமாய் வளர்ந்த AK

அந்த வகையில் துணிவு திரைப்படம் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் படியாக உருவாகி உள்ளது. அதற்கான சென்சார் சான்றிதழ்களும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தில் பல கெட்ட வார்த்தைகள் இடம் பெற்று இருக்கிறதாம். அதனால் கிட்டத்தட்ட 17 இடங்களில் பீப் சவுண்ட் போடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ட்ரெய்லரில் அஜித்தின் தோற்றம், வசனங்கள் ஆகியவற்றை பார்க்கும் போது மங்காத்தா பட அஜித்தை பார்ப்பது போன்றே இருந்தது. மேலும் அதில் ஒரு கெட்ட வார்த்தை பேசும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. ட்ரைலரில் மட்டுமல்லாமல் படம் முழுவதிலும் இதில் எக்கசக்க கெட்ட வார்த்தைகளை அஜித் சரளமாக பேசியிருக்கிறாராம். இதன் மூலம் துணிவில் அஜித்தை நாம் மோசமான கெட்டவனாக பார்க்கப் போகிறோம் என்பது மட்டும் உறுதி. இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: துணிவிற்கு தன் வாயாலே விளம்பரம் செய்த தளபதி.. சத்தமில்லாமல் சந்தோசப்பட்டு வரும் அஜித்

Trending News