திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.. துணிவு படமே இன்னும் முடியலையாம், அதுக்குள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளா?

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் மோத இருப்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த இரு படங்களின் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

Also read: வைரலாகும் அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்.. பக்கா ஜென்டில்மேன் என மீண்டும் நிரூபித்த தல!

தமன் இயக்கத்தில் வெளியான ரஞ்சிதமே பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் இப்பாடல் தான் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கூடிய விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

ஆனால் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு மட்டும் யாருக்கும் தெரியவில்லை. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா என்ற பாடல் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளிவர இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் இன்னும் இந்த பாடலின் சூட்டிங் ஆரம்பிக்கவில்லை என்று வெளிவந்துள்ள தகவல் அஜித் ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

Also read: ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு

அந்த வகையில் இந்த பாடலின் சூட்டிங் நாளை தான் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. படப்பிடிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து மூன்று நாட்கள் வரை பாடல் காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பே சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட துணிவு திரைப்படம் எப்போது வரை இன்னும் முடியாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது.

அதிலும் ரிலீஸ் எப்போது என்று அறிவித்த நிலையில் கூட இன்னும் சூட்டிங் நடந்து கொண்டிருப்பது தான் ரசிகர்களின் பேரதிர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த சூட்டிங் எப்போது முடிந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்ற தகவலும் யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் இந்த பாடலை தெறிக்க விடுவதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: அஜித்துடன் அடுத்த படம்.. லோகேஷ் கொடுத்த அல்டிமேட் அப்டேட்!

Trending News