வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நம்பியவர்களை ஏமாற்றி திராட்டில் விட்ட அஜித்.. இஷ்டம் இல்லாததை செய்யும் ஏகே

தன்னுடைய சொந்த முயற்சியால் தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞனாய் உருவெடுத்தவர் அஜித். ஆரம்ப காலகட்டத்தில் தனக்கு கிடைத்த வேலையை மேற்கொண்ட இவர் தற்பொழுது தன் கனவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவரின் கனவை நிறைவேற்ற இவர் செய்து வரும் காரியம் தற்பொழுது ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

அஜித் தன்னை ஒரு ரேசராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குரிய ஸ்டைலில், மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவ்வாறு சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் இவர் நடிப்பை இரண்டாம் பட்சமாக தான் பார்த்துள்ளார் என்பது வேதனைக்குரியதாக இருந்து வருகிறது.

Also Read: அஜித், அரவிந்த்சாமிக்கு முன்பே வெள்ளை தோல் நிறத்தில் ரசிக்கப்பட்ட நடிகர்.. அதிகமாக ரசித்த ரசிகைகள்

இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் தற்பொழுது இவர் செய்யும் விஷயங்கள் வெறுப்பை சம்பாதிக்கும் விதமாக இருந்து வருகிறது. இவரின் அடுத்தடுத்த படங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் ரசிகர்களுக்கு ஆப்பு வைப்பது போல தற்பொழுது ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமியை ஆரம்பித்துள்ளார்.

இவற்றை ஆரம்பிப்பது தான் அவரின் ஆசையும் கனவுமாக இருந்து வந்திருக்கிறது. இது தெரியாமல் இவரை சதா நேரம் நம்பி இருந்த ரசிகர்கள் தற்பொழுது ஏமாற்றத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் இவர் செய்து வரும் செயல்களை பார்க்கும் போது இவருக்கு நடிப்பில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

Also Read: அஜித்தின் வாழ்நாள் ஆசை நிறைவேறியது.. அதைப்போல் கனவை நிறைவேற்ற துடிதுடிக்கும் இளையராஜா

இதனால் தான் என்னவோ முன்கூட்டியே எனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்றும். மேலும் என்னை தல என்று கூப்பிடாதீர்கள், நானும் ஒரு சாதாரண மனுஷன் தான் எனக் கூறி வந்தார் போல என நினைக்க வைக்கிறது. இவ்வாறு என் பின்னாடி வராதீர்கள் என்று அவர் கூறியதை ஏற்க மறுத்த ரசிகர்கள் தற்பொழுது மனவேதனைக்கு ஆளாகி வருகின்றனர்.

தன் கனவு இலட்சியத்திற்கு உயிர் கொடுத்து வரும் அஜித் சினிமாவில் இருந்து விலகினாலும் இவரின் ரசிகர்கள் இவரை விட்டு விலகுவதாக இல்லை. என்னதான் லட்சியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் இவர் நடிப்பை அறவே விட மாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் ரசிகர்கள். இதற்கு உதாரணமாகவே அவர்கள் இவரின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Also Read: ஐடி ரைடு, படப்பிடிப்பு தாமதம்.. அஜித்தின் பொறுமையை சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி

Trending News