செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விக்னேஷ் சிவனை கைவிடாத அஜித்.. ஏகே 62 குழப்பத்தை இன்னும் கிண்டி கிளறிய நெட்பிளிக்ஸ்

அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படத்தை பற்றிய செய்தி தான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தது. அதாவது அஜித், லைக்கா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பே வெளியானது.

ஆனால் கடந்த சில நாட்களாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகவும் அதற்கு பதிலாக மற்ற இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும் விஷ்ணுவர்தன் மற்றும் மகிழ் திருமேனி இவர்களுள் ஒருவர் ஏகே 62 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

Also Read : நான் என்றும் அஜித்தின் ரசிகன் தான்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூன்றெழுத்து நாயகன்

இந்த சூழலில் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாகவும் அஜித்துக்கு எதிராகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் ரசிகர்கள் சற்று குழப்பத்தை அடைந்துள்ளனர். அதாவது ஏகே 62 படப்பிடிப்புக்கு முன்பே இந்த படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் பற்றி இருந்தது.

அதாவது ஏகே 62 படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தியேட்டர் ரிலீஸுக்கு பின்பு நெட்பிளிக்சில் வெளியாகும் என்ற அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால் இப்போது பதிவிற்கு விக்னேஷ் சிவன் லைக் போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்துள்ளனர்.

Also Read : அஜித்திற்கு கதை சொன்ன பிரம்மாண்ட இயக்குனர்.. போட்டிக்கு வந்த சூப்பர் ஹிட் டைரக்டர்

விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸின் பதிவிற்கு தற்போது லைக் போட்டுள்ளதால் ஏகே 62 படத்தில் இருந்து விலகவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. மேலும் அஜித் தனக்கு தோல்வி படம் கொடுத்தாலும் அந்த ஹீரோவுடன் ஹிட் படம் கொடுத்து விட்டு தான் வேறு ஒரு இயக்குனர் படத்தில் நடிப்பார். இப்படி இருக்கையில் விக்னேஷ் சிவனை எப்படி கைவிடுவார்.

எனவே விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் கூட்டணியில் ஏகே 62 படம் உருவாவது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வாரத்திற்குள் லைக்கா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. ஆகையால் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : விக்னேஷ் சிவனால் தள்ளிப்போகும் ரஜினி படம்.. அஜித் வேண்டாம் என சொன்னதன் பின்னணி

Trending News