திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பயமுறுத்திய சினிமா இண்டஸ்ட்ரி.. விஜய்யை பின்பற்றும் அஜித்

அஜித் தனக்கான கூட்டத்தை உருவாக்கி தனக்கென ஒரு பாதையையும் உருவாக்கி இன்று முக்கிய இடத்தில் இருந்து வருகிறார். அதிக தோல்வி படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் இவர் மட்டுமே. கதை தேர்ந்தெடுக்க தெரியாமல் பல தோல்வி படங்களை கொடுத்தவர் அஜீத் நான்கைந்து வருடங்களாக கதையில் கவனம் செலுத்தி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

இவர் எப்படிப்பட்ட பிரம்மாண்ட படத்தில் நடித்தாலும் படத்தின் புரமோஷனுக்கு வரவே மாட்டார். தொலைக்காட்சிகளில் தோன்ற மாட்டார்,பேட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார். ஒரு சாதாரண நடிகன் செய்யும் செயலை கூட இவர் செய்ய மாட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இருந்தாலும் இவரது ரசிகர் பட்டாளம் குறைந்தபாடில்லை அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

Also Read: 20 வருடங்களாக முருகதாஸை ஒதுக்கி வைத்துள்ள அஜித்.. பின்னணியில் இருக்கும் சம்பவம்

எந்த படத்தின் புரமோஷன் செல்லாத அஜித். தற்போது வினோத் இயக்குனர் படத்தில் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். வலிமைக்கு பிறகு நடிக்கும் துணிவு திரைப்படத்தில் அஜித்தின் வித்தியாசமான சில அணுகுமுறைகளை ரசிகர்கள் காணமுடிகிறது. இவர் ஊர் சுற்றுவது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்போது தினந்தோறும் பல போட்டோக்களை மற்றும் வீடியோக்களை மக்களுக்கு காண்பித்து வருகிறார். இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் இதில் மறைமுகமாக ஒரு காரணம் இருக்கிறது.

துணிவு திரைப்படத்தின் அப்டேட் வந்தது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்கள். இது விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் இதே மாதிரி 3 புகைப்படங்களை வெளியிட்டனர். அதே பாணியில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார்கள். இது ஒருவகை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது விஜய்யை பின்தொடர்கிறார் அஜித் என்ற கோணத்திலும் பேசிவருகிறார்கள் சினிமா பிரபலங்கள்.

Also Read: வாரிசு நடிகரின் வாகையை ழ்க்திசை திருப்பிய விஜய்.. ஆனா இவரு அஜித்தோட தீவிர ரசிகர் ஆச்சே

இருக்கலாம் அஜித்தின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தெரிகிறது. இது ஒருவகை பயம் என்று கூட என்று சொல்லலாம். ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் மற்ற நடிகர்கள் போல் அவர்களை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் அப்படியில்லையென்றால் நாம் சினிமாவில் நீடிப்பது கடினம் படமும் வெற்றி பெறுவது கடினம் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறி வருகின்றார்கள்.

அதனால் இப்பொழுது அஜித், விஜயை பின்தொடர்வது உறுதி ஆனாலும் தவறு ஏதுமில்லை எப்படியோ அஜித் மாறிவிட்டால் சரி என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இப்பொழுது அது நடக்க தொடங்கியிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கும் ஆரோக்கியம்,அஜித்திற்கும் ஆரோக்கியம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்ற விதத்தில் இதனைப் பார்க்கலாம் என்று சினிமா பிரபலங்கள் இன்று பலபேர் பேசி வருகின்றனர். அஜித்தின் இந்த மாற்றம் பாராட்டத்தக்கது.நீடிக்க வேண்டும்.

Also Read: விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்

Trending News