சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திருமணத்திற்கு முன்பாகவே மனைவி அந்தஸ்தை கொடுத்த அஜித்.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

நடிகர் அஜித்தும் ஷாலினியும் 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டு மகன், மகளுடன் ரசிகர்களுக்கு பிரியமான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அமர்க்களம் திரைப்படத்தின் போது அஜித்திற்கு ஏற்பட்ட காதலும்,அதனை ஷாலினியிடம் மறைமுகமாகவும்,நேர்ப்படையாகவும் சொன்ன நிகழ்வு நம்மில் பலரும் அறிந்ததே.

ஆனால் நாம் யாரும் அறியாத ,திருமணத்திற்கு முன்பு அஜித், ஷாலினியை மனைவி என்று சொன்ன நிகழ்வை பிரபல டப்பிங் கலைஞர் தெரிவித்துள்ளார். நடிகர் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர்கள் தான் டப்பிங் கலைஞர்கள்.

Also  Read :40 வருடங்களாக நிலைத்து நின்ற தயாரிப்பு நிறுவனம்.. ஒரே படத்தால் சோலியை முடித்த அஜித்

இதில் முக்கியமாக நடிகைகள் தேவயானி,ரம்பா,ஷாலினி,சுவலக்ஷ்மி உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்த,டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவி அண்மையில் தனது அனுபவங்களை பற்றி பேட்டியில் பேசினார்.அதில் நடிகை ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் கொடுத்த டப்பிங் பற்றியும், அதன்பின்பு பிரியாத வரம் திரைப்படத்தில் கொடுத்த டப்பிங் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் பேசிய அவர், அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினியும் அஜித்தும் ஒன்றாக நடித்திருப்பர். அத்திரைப்படத்தில் ஷாலினிக்கு டப்பிங் கொடுத்துவிட்டு வெளியே வந்த ஸ்ரீஜா ரவி, அஜித்தை சந்தித்துள்ளாராம். அப்போது பேசிய அஜித், எனது மனைவி ஷாலினிக்கு நீங்கள் நன்றாக டப்பிங் கொடுக்கிறீர்கள் நன்றி என தன்னிடம் கூறியதாக ஸ்ரீஜா ரவி தெரிவித்தார்.

Also  Read :அஜித், விக்ரமை பார்த்து ஜெர்க்காகி ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்.. ஹாட்ரிக் வெற்றி பெறுமா பிரின்ஸ்

அந்த சமயத்தில் அஜித்திற்கும் ஷாலினிக்கும் திருமணமே ஆகவில்லை.ஆனால் மணம் முடிப்பதற்கு முன்பாகவே அஜித்,ஷாலினியை மனைவி என கூறியது தனக்கு இன்றளவும் பூரிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பலரும் காதலி சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் அஜித்தின் மனைவி என்ற சொல், தன்னை பிரம்மிப்படைய வைத்ததாக ஸ்ரீஜா ரவி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அஜித்துடன் காதல் கோட்டை திரைப்படத்தில் அஜித்துடன் ஒன்றாக இணைந்து தேவயானிக்கு தான் டப்பிங் கொடுத்ததாகவும், அப்போது இருந்த அஜித் எப்படி அமைதியாக,மரியாதையாக உள்ளாரோ,இன்றும் அப்படியேதான் உள்ளார் என ஸ்ரீஜா ரவி அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

Also  Read :16 வருடங்கள் ஏஆர் ரஹ்மானுடன் இணையாத அஜித்.. காரணமான யுவன் ஷங்கர் ராஜா

Trending News