திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வேறு வழியில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்த அஜித்.. தொடர்ந்து இத்தனை படங்களா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர்கள் ரஜினி, கமல் மற்றும் அஜித், விஜய் இதற்கு நான்கு பேர் மட்டுமே தமிழ் சினிமாவை தன் பக்கம் வைத்துள்ளார்கள். இதில் அனைவரும் ஒருசேர இருந்தாலும் அஜித் மட்டும் தனியாக இருப்பார் அது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் செய்வது எதையும் அஜித் ஒருவர் செய்யமாட்டார் படத்தை மட்டும் நடித்து கொடுத்து விட்டு சென்று விடுவார்.

பல வருடங்களாக உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படங்கள் நடித்து வந்தனர். இதில் வித்தியாசமாக அஜித் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கை கோர்க்க மாட்டார், அதில் தெளிவாக இருப்பார். ஆனால் தற்போது சினிமாவில் நடந்து வரும் போட்டிகளில் தானும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அஜித் மாறி வருகிறார்.

Also Read : போனி கபூரை விட வெறியுடன் காத்திருக்கும் அஜித்.. 8 வருடங்களுக்குப் பின் நேருக்கு நேர் மோதும் சம்பவம்

லைக்கா நிறுவனத்துடன் அஜித் 3 படம் பண்ணப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 3 படங்களுக்கும் மொத்த பட்ஜெட் 750 கோடி ஒதுக்கி உள்ளனர். ஒரு படத்திற்கு சுமார் 250 கோடி செலவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க லைக்கா தயாரிக்கிறார்கள்.இதற்கு அடுத்து அஜீத் சிவா உடன் இணைகிறார் இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன ஆனால் உறுதியாகவில்லை.

இல்லையென்றால் லைக்கா உடன் கண்டிப்பாக இணைவார் என்று தெரிகிறது. எதற்காக இப்படி என்றால் இனிமேல் அஜித் பழைய ஃபார்முலாவில் இருந்தால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று அவருக்கு நன்றாக தெரிகிறது. அதனால்தான் இப்போது அதிகமாக முகத்தை ரசிகர்களுக்கு அடிக்கடி காட்டி வருகிறார். எங்கு போனாலும் போட்டோ எடுப்பது என்று ரசிகர்களை சந்திப்பதும் என்றும் புது விதமாக அஜித் இருந்து வருகிறார்.

Also Read : அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்

பொங்கலுக்கு விஜய் படம் வாரிசு வெளியாகுவது உறுதியான நிலையில் அவருடன் போட்டி போட்டி ஆகவேண்டும் என்ற நிலைபாட்டில் அஜித் துணிவு படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இது புதுவிதமான போட்டியாக இருந்தாலும் அஜித்திற்கு மற்றும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் புதுவிதமான சந்தோஷத்தையும் கொடுக்கும். லைக்கா மற்றும் சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனத்துடன் கை கோர்ப்பது பணத்திற்காக மற்றும் பெரிய பிரம்மாண்டமான படங்களில் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் செய்கிறார்.

எப்படியோ போட்டி போட்டு நிறைய படங்கள் அஜித் கொடுக்கப் போகிறார் என்று தெரிகிறது. இன்னும் மற்ற ஹீரோக்கள் செய்வதை இவரும் செய்யப்போகிறார் இனிமேல் புரமோஷனுக்கு வருவார் என்றும் மற்றும் பொது மேடைகளிலும் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் ரசிகர்களுக்கும் மற்றும் சினிமாவிற்கும் நல்லது.

Also Read : அஜித்திற்காக விட்டுக்கொடுத்த விஜய்.. இப்படிப்பட்ட மனசு யாருக்கு வரும்

Trending News