செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கேட்டாலே மிரளுது, தரமான இரண்டு டைட்டிலை லாக் செய்த அஜித்.. அக்டோபர் 2-ஐ குறி வைக்கும் ஏகே 61

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். பல மாதங்களுக்கு முன்பே சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க வேண்டும் என்ற பிளானுடன் களம் இறங்கிய பட குழு தற்போது வரை படத்தை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Also read: வாரிசு ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி.. எந்த அலப்பறையும் இல்லாமல் விலகிய அஜித்தின் AK61

இதுவே அஜித் ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படத்தின் டைட்டிலும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது அவர்களை குழப்பமடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஏகே 61 படத்திற்காக அஜித் இரண்டு மாஸ் டைட்டிலை லாக் செய்து வைத்துள்ளாராம்.

கடந்த சில நாட்களாகவே படத்திற்கான டைட்டில் குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது துணிவே துணை, துரோகம் என்ற இரண்டு டைட்டில்கள் செலக்ட் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டில் ஒரு டைட்டிலை தான் படகுழு அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது.

Also read: விஜய்யை தூக்கிக் கொண்டாடும் போனி கபூர்.. விஷயத்தைக் கேள்விப்பட்டு கடுப்பான அஜித்

அந்த வகையில் வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று இதற்கான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. இந்த செய்தி தற்போது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஏகே 61 குறித்து ஏதாவது ஒரு அப்டேட் வெளிவராதா என்று ஏங்கி இருந்த ரசிகர்கள் தற்போது அக்டோபர் 2 ஐ எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அஜித்தின் கடந்த சில திரைப்படங்கள் வி வரிசையில் தான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கும் வி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் தலைப்பு தான் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அஜித் தற்போது வேறு எழுத்தில் தலைப்பை முடிவு செய்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: முனிவர் போல நீண்டு கொண்டே போகும் அஜித்தின் தாடி.. வைரலாகும் கேதார்நாத் புகைப்படங்கள்

Trending News