செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இப்போதைக்கு விடாமுயற்சி தொடங்க வாய்ப்பே இல்ல.. அஜித் செய்யும் வேலையால் புலம்பி தவிக்கும் இயக்குனர்

Actor Ajith: அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஏனென்றால் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை விடாமுயற்சி படம் தொடங்காமல் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் விடாமுயற்சி என்று டைட்டில் வைக்க இதுதான் காரணமோ என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் படியாக அஜித் செய்து வருகிறார். அதாவது லைக்கா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுவும் அஜித்தின் பிறந்த நாளன்று இந்த டைட்டில் வெளியிடப்பட்டது.

Also Read : தனுசுக்கு ஜோடியாகும் அஜித்தின் மகள்.. 22 வயது வித்தியாசம், கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் பியூட்டி குயின்

ஆனால் தற்போது வரை படப்பிடிப்பு நடத்த முடியாமல் இழுத்து அடித்து கொண்டு போகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு அஜித் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. விடாமுயற்சியுடன் தனது சுற்றுலாவை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அஜித் இவ்வாறு டைட்டில் வைத்தாரோ என யோசிக்கத் தோன்றுகிறது.

அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டாகி வந்தது. அந்த வகையில் தற்போது அஜித் பைக் சுற்றுப்பயணம் மீண்டும் தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read : அஜித் மச்சான் இல்லாமல் உருவாகும் மோகன் ஜி-யின் படம்.. அடுத்த ஏழரைக்கு தயாரான பெரிய ஹீரோ

ஆகையால் இப்போதைக்கு விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் அஜித் பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு உள்ளதால் இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகும். எனவே அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அஜித் மீண்டும் பைக் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளதால் எப்போது விடாமுயற்சி தொடங்கும் என்று புலம்பித் தவித்துக் கொண்டிருக்கிறார் மகிழ்திருமேனி.

விடாமுயற்சினு டைட்டில் வச்சது இதுக்கு தான் போல

ajith
ajith

வாரிசு படத்தை முடித்தவுடன் விஜய் அடுத்ததாக லியோ படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68 படத்தின் இயக்குனரையும் லாக் செய்து உள்ள விஜய் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார். ஒருபுறம் அரசியலிலும் படு தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அஜித் இவ்வாறு விடாமுயற்சியை தாமதப்படுத்துவது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

முழு வீச்சாக உலகம் சுற்றும் அஜித்

ajith-cinemapettai
ajith-cinemapettai

Also Read : அஜித்துக்கு எதிராக கட்டம் கட்டிய சுகாசினி, மணிரத்தினம்.. பத்தே நாளில் படத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதன் பின்னணி

Trending News