திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லைக்கா தலைமையில் மகிழ்திருமேனியை முடிக்கிவிட்ட அஜித்.. ஐ டி ரைட் ஆல் கதி கலங்கும் விடாமுயற்சி

Actor Ajith: கேங்ஸ்டராய் களம் இறங்கிய அஜித், துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தில் ஏற்பட்ட ஐ டி ரைடு பற்றிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது அஜித் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பைக் ரைடிங் டூரில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இதனால் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் இப்படத்தில் லைக்கா தயாரிப்பை மேற்கொள்வதால் அதன் ஐ டி ரெய்டு பிரச்சினையால் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

Also Read: குடித்தே சாவை தேடிக்கொண்ட 9 திரை பிரபலங்கள்.. ஒரு கோடி செலவு செய்து உயிர் தப்பிய ரஜினி

இதற்கு இடையே நேபாளுக்கு பைக் டூர் சென்ற அஜித் இம்மாதம் திரும்புவதால் படப்பிடிப்பை இம்மாதம் இறுதிக்குள் தொடங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத அஜீத் லைக்கா மற்றும் மகிழ்திருமேனியை லொகேஷன் பார்க்க அனுப்பி உள்ளாராம்.

மேலும் கோவா, புனே, மும்பை போன்ற இடங்களில் விடாமுயற்சியின் சூட்டிங் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து விடாமுயற்சி படம் பேக் ஆஃப் ஆவதற்கு பின்னால் ஒரு பெரும் புள்ளி இருந்து வருகிறாராம். லைக்கா மற்றும் மதுரையை சேர்ந்த அன்பு செழியன் இருவரும் நல்ல நண்பர்களாம்.

Also Read: ஜோதிகா போலவே சூர்யா எடுத்திருக்கும் தில்லான முடிவு.. கேப்பில் கிடா வெட்டிய பட வாய்ப்பு

இப்படத்தின் பைனான்ஸ் இவர்களிடமிருந்து வரும் என எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இவர்கள் மேற்கொள்ளும் ஐ டி ரைடு பிரச்சனையால் தற்பொழுது விடாமுயற்சி கதிகலங்கி வருகிறது. இருப்பினும் அஜித் திரும்பிய பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அப்டேட் வந்துள்ளது.

மேலும் அஜித் நவம்பர் மாதம் உலகளவில் பைக் டூர் மேற்கொள்ள இருப்பதால் இந்த குறிப்பிட்ட 6 மாதத்தில் இப்படத்தினை முடித்தே தீர வேண்டும் என்ற நிலையில் மகிழ் திருமேனி இருந்து வருகிறார். ஆகையால் துணிவு படம் போன்று இப்படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற பேச்சு நிலவி வருகிறது.

Also Read: ஒரே படத்தில் இணைந்து நடித்து திருமணம் செய்து கொண்ட 6 ஜோடி.. சினேகாவின் மீது காதல் வலையில் விழுந்த பிரசன்னா

Trending News